மும்பையில் சட்ட விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டதாகக் கூறி மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் பங்களா மும்பையில் சட்ட விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டதாகக் கூறி, பங்களாவின் ஒரு பகுதியை இடிக்கும்படி, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, மும்பையிலுள்ள ஜுஹு பகுதியில், பா.ஜ.கா.,வைச் சேர்ந்த மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானேவின் பங்களா உள்ளது. இதில் சட்டவிதிகளுக்கு புறம்பாக கூடுதலாக கட்டிய பகுதிகளை முறைப்படுத்தக் கோரி அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்ற அமர்வு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூனில், கட்டடத்தை முறைப்படுத்த மாநகராட்சி மறுத்தது; அதை உயர் நீதிமன்றமும் ஏற்றது.
மும்பையில் விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட அமைச்சரின் பங்களாவை முறைப்படுத்த அனுமதிக்க முடியாது. அப்படி செய்தால் சட்டவிரோத கட்டுமானங்கள் மும்பையில் பல இடங்களில் தொடரும். ஏற்கனவே சட்டவிரோதமாக கட்டியவர்களும் முறைப்படுத்தக் கோரி விண்ணப்பிப்பர்.எனவே அமைச்சரின் சட்டவிரோத கட்டுமானத்தை ஏற்க முடியாது.
அதனால், அந்த பங்களாவில், முறைப்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பகுதிகளை இரண்டு வாரங்களுக்குள் இடித்து, அதுதொடர்பான அறிக்கையை அடுத்த ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
-இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய அமைச்சர் ரானேவுக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.