அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

டந்த அதிமுக ஆட்சியின் 2018, 2019ம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை சீரமமைப்புப் பணிக்காக 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புப் பணிக்காக 290 கோடி ரூபாய் மதிப்பிலும் 37 டெண்டர்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டன. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அப்போது புகார்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி, இது தொடர்பாக அறப்போர் இயக்கமும், திமுகவும் நீதிமன்றத்தில் புகார் மனுவும் தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெண்டர் ஒதுக்கீட்டு பணிகளில் முறைகேடு நடைபெற்றது தொடர்பான புகாரில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தங்கள் மீதான வழக்கையும் ரத்து செய்யும்படி எம்.எஸ்.கன்ஸ்ட்ரக் ஷன் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு, ஆலயம் ஃபவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல் மற்றும் கண்ஷ்ட்ரோ மால் ஆகிய நிறுவனங்களும் மனு தாக்கல் செய்திருந்தன. அந்த மனுவில், ‘எஸ்.பி.வேலுமணி ஒரு பொது ஊழியர் என்பதால் அவருக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதால் தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஐந்து நிறுவனங்களின் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அறப்போர் இயக்கம் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த டெண்டர் முறைகேடு வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும்  தயாராக இருப்பதாக அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. அதையடுத்து, ஆறு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு  உத்தரவிட்ட நீதிபதி, ‘டெண்டர் முறைகேடு புகார் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் ஐந்து நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது’ என நீதிபதி தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com