கட்டாய மத மாற்றத்தைக் கண்டித்து பாகிஸ்தானில் இந்து அமைப்புகள் பேரணி!

கட்டாய மத மாற்றத்தைக் கண்டித்து பாகிஸ்தானில் இந்து அமைப்புகள் பேரணி!
Published on

ண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மைப் பிரிவினராக வாழும் இந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாகவும், அவர்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும் அங்கு வாழும் இந்து அமைப்புகள் பலவும் குற்றம்சாட்டி வருகின்றன. இவை தவிர, அவ்வப்போது இந்து சிறுமியரை கடத்திக் கொண்டு சென்று முஸ்லிம்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வரும் நிகழ்வுகளும் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டாய மத மாற்றம், ஆக்கிரமிப்பு மற்றும் இந்து சிறுமியரைக் கடத்தி திருமணம் செய்வது போன்ற நிகழ்வுகளைக் கண்டித்து வரும் 30ம் தேதி சிந்து சட்டசபை கட்டடத்தில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த சிறுபான்மையினர் நலனுக்காகப் போராடும், 'பாகிஸ்தான் தாராவர் இட்டேஹாட்' என்ற அமைப்பு முடிவு செய்துள்ளது.

இந்தக் கண்டனப் பேரணிக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இது குறித்து பாகிஸ்தான் தாராவர் இட்டேஹாட் அமைப்பின் தலைவர் பகர் ஷிவா குச்சி கூறுகையில், ''மார்ச் 30ம் தேதி நடைபெறும் இந்தக் கண்டனப் பேரணியில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பர். இந்துக்கள் மற்றும் மற்ற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்தப் பேரணி நடத்தப்படுகிறது'' என்று கூறி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com