

அரை நூற்றாண்டுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது நாசா. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை நாசா தொடங்கியது. இந்தத் திட்டத்தின் படி விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள்; மாறாக நிலவைச் சுற்றி வருவார்கள்.
மனிதர்கள் மீண்டும் நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கப் போவது ஆர்டெமிஸ் III மிஷனில் தான். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால், நிலவில் கால் பதிக்கும் முதல் பெண்ணும், முதல் கறுப்பினத்தவரும் இந்தத் திட்டத்தின் மூலம் வரலாறு படைக்க உள்ளனர். இதுவரை யாரும் சென்றிராத நிலவின் தென்துருவப் பகுதியில் (South Pole) தரையிறங்குவதே நாசாவின் முக்கிய நோக்கம். அங்கு தான் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
ஆர்டெமிஸ் திட்டத்திற்காக உலகின் வலிமையான ராக்கெட்டான Space Launch System மற்றும் மனிதர்கள் பயணிக்கும் Orion விண்கலத்தை நாசா பயன்படுத்தியது. இந்நிலையில் இன்று அதிகாலை யாரும் கண்டிராத அரிய சூரிய கிரகணத்தை நிலா பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்கள் கண்டுகளித்துள்ளனர்.
ரீட் வைஸ்மேன் (Reid Wiseman) - கமாண்டர், விக்டர் குளோவர் (Victor Glover) - பைலட், கிறிஸ்டினா கோச் (Christina Koch) - மிஷன் ஸ்பெஷலிஸ்ட், ஜெரமி ஹான்சென் (Jeremy Hansen) - மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஆகிய 4 வீரர்களும் நாசாவின் சார்பாக நிலவை ஆய்வு செய்ய 10 நாள் பயணமாக நிலவுக்கு சென்றுள்ளனர்.
7-வது நாளான இன்று அதிகாலை 4:37 மணிக்கு பூமியில் இருந்து 4,06,777 கி.மீ. என்ற அதிகபட்ச தொலைவை அடைந்தனர் ஆர்டெமிஸ் குழுவினர். அதிகாலை 4:55 மணிக்கு ஆர்டெமிஸ் குழுவினருடன், நாசா கட்டுப்பாட்டு அறை தொடர்பை ஏற்படுத்தியது.
சரியாக காலை 6:05 முதல் 7:02 வரையிலான நேரத்தில் யாரும் கண்டிராத அதிசய சூரிய கிரகணத்தை ஆர்டெமிஸ் குழுவினர் கண்டுகளித்துள்ளனர். இந்த நேரத்தில் நிலவுக்கு பின்னால் சூரியன் சென்றதால், அந்தப் பகுதி முழுவதும் இருளாக இருந்தது.
மேலும் 6:50 மணிக்கு நிலா தொடர்பான ஆய்வுகளை இந்தக் குழு முடித்தது. இன்று இரவு 10:55 மணிக்கு நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து ஓரியன் விண்கலம் வெளியேற இருக்கிறது.
இன்று அதிகாலை 4:32 மணிக்கு நிலவின் மேற்பரப்பிற்கு மேலே 6,550 கி.மீ. உயரத்தில் மிக நெருக்கமாக கடந்து சென்றது ஓரியன் விண்கலம்.
இந்தப் பயணத்தின் மூலம் பிரபஞ்சம் உருவான முதல் புள்ளியை மனிதன் தொட்டான் என்ற வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.