ஹோலி! Be Careful!

மும்பை பரபர
ஹோலி! Be Careful!

லக மகளிர் தினமான 8.3.2023 அன்று ஹோலி பண்டிகையும் வண்ணமயமாக வரவிருக்கிறது. ஹோலி பண்டிகை சமயம் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும், அமைதிக்குப் பங்கம் விளைவிக்காமல் தடுக்கவும், மும்பை போலீஸார் சில முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

“பொது இடங்களில் வண்ண நீரைத் தெளிப்பது; மதக் கலவரத்துக்கு வழி வகுக்கும் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வண்ணக் கலவை நீர் அல்லது வெற்று நீர் போன்ற திரவங்களால் நிரப்பப்பட்ட பலூன்களைத் தயாரிப்பது, வீசுவது கூடாது. மீறினால் மகாராஷ்டிரா போலீஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதாகும்.

100 கோடி அபராதம் வசூல்!

100 கோடி அபராதம் வசூலா? அடேங்கப்பா! எங்கே? யாரிடம்?

மும்பை மத்திய ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்து வசூலிக்கின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் கடந்த 26ஆந் தேதி வரையில் வசூலான அபராதத் தொகை ` 100 கோடியென மத்திய ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பை டிவிஷனில் முதன்முறையாக இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்ந்துள்ளது.

இதில் சிறப்பாக செயல்பட்ட டிக்கெட் பரிசோகர்கள்:

எஸ். நைனானி 17,128 பயணிகளைப் பிடித்து வசூலித்த தொகை ` 1.50 கோடி.

பீம் ரெட்டி 10,409 பயணிகளைப் பிடித்து வசூலித்த தொகை ` 96.35 லட்சம்.

ஆர் டி பகத் 9,991 பயணிகளைப் பிடித்து வசூலித்த தொகை ` 89.90 லட்சம்.

அபிஷேக் சின்கா 9,980 பயணிகளைப் பிடித்து வசூலித்த தொகை ` 89 லட்சம்.

பாராட்டப்பட வேண்டிய சாதனை!
ஓசிப் பயணம் அபராதம் செலுத்த வைக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com