இனி வீடு வாகன கடன் வட்டி உயரும்! ரெப்போ விகிதம் 0.25% உயர்வு!

இனி வீடு வாகன கடன் வட்டி உயரும்! ரெப்போ விகிதம் 0.25% உயர்வு!

ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று 8 தேதி கூட்டத்தின் முடிவுகள் வெளியாக உள்ளது. அதனால் இன்று ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை முடிவில் வட்டி உயர்வுக்கு வாய்ப்பிருக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் ரெப்போ விகிதம் இன்று 0.25% உயர்ந்துள்ளது.

இதனை அடுத்த இரு மாதத்திற்கு ரெப்போ விகிதம் ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் டிசம்பர் மாதம் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவித்தார். டிசம்பர் மாதம் கூட்ட முடிவில் SDF விகிதம் 6 சதவீதமாகவும், MSF 6.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.

இந்த உயர்வின் மூலம் வங்கிகள் தனது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. ஆர்பிஐ கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன், பைக் லோன், கார்ப்ரேட் லோன், ஸ்டார்ட்அப் கடன், தங்கக் கடன் வரையில் அனைத்திற்கும் வட்டி அதிகரிக்கும். வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் கட்டாயம் கடன் வாங்கியோரின் ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும்.

ஆர்பிஐ 2022 ஆம் ஆண்டில் 5 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த 5 முறை வட்டி விகித உயர்வில் ரெப்போ விகிதம் 2.25 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உள்ளது.இந்தியாவினை பொறுத்தவரையில் தொடர்ந்து உணவு பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. ஆக இதுவும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com