வீட்டு கடன் வட்டிவீதம் அதிகரிக்குதா? அப்ப இதை தெரிந்து கொள்ளுங்க ...!

வீட்டு கடன் வட்டிவீதம் அதிகரிக்குதா? அப்ப இதை தெரிந்து கொள்ளுங்க ...!

இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை 35 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது. இது வங்கிகளை கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. தொடர்ச்சியாக கடந்த 7 மாத காலமாகவே தொடர்ந்து வட்டி விகிதமானது அதிகரித்து வருகின்றது.

தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது 9% ஆக இருக்க வாய்ப்புள்ளது . இதில் பல கடன் வாங்கியோரின் வயது ஏற்கனவே 60 வயதினை தாண்டியிருக்கலாம். கடன்களின் கால அளவும் அதிகரித்துள்ளது. கடன் விகிதங்கள் உயரும்போது வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது. எனினும் இது நிலையான வட்டி விகிதத்தினை தேர்தெடுத்தவர்களுக்கு பொருந்தாது.

இதன் காரணமாக வங்கிகள் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கலாம். குறிப்பாக வீட்டுக் கடனுடக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உங்கள் கடனிலும் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். கடந்த 7 மாதங்களில், 2.25% அதிகரித்து, 6.25% ஆக அதிகரித்துள்ளது.

வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தால் அதில் கடனுக்கான வட்டி விகிதம் என்பது உச்சத்தில் இருக்கலாம். ஆக இது போன்ற சமயங்களில் வேறு வங்கிக்கு கடனை டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். எனினும் இதனை செய்வதற்கு முன்பும் பின்பும் என்னென்ன பிரச்சனைகள் என்பதையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதில் வட்டி விகிதம் மட்டும் அல்ல, செயல்பாட்டுக் கட்டணம், எம்ஓடி கட்டணங்கள், நிர்வாக கட்டணங்கள் என பலவும் அதிகரிக்கலாம். ஆக அதனையும் தெரிந்து கொண்டு பின்னர் மாற்றம் செய்யலாம்.

வங்கிகளில் மாத தவணை தொகையை அதிகரிக்க கூறலாம். இதன் மூலம் விரைவில் கடனை திரும்ப செலுத்த முடியும். இதன் மூலம் தொகையை மிச்சப்படுத்த முடியும் அல்லது கூட்டியேவும் கடனை நீங்கள் செலுத்தி முடிக்க முடியும்.

ஒவ்வொரு மாதமும் இ எம் ஐ-யினை கூடுதலாக செலுத்த முடியாவிட்டால், ஒரு வருடத்திற்கு ஒரு தவணையை ஆவது அதிகமாக செலுத்தலாம். இதுவும் பணத்தினை சேமிக்க உதவும். இது கடனை முன் கூட்டியே செலுத்தவும் வழிவகுக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக கடனில் 5% முன் கூட்டியே செலுத்தலாம். இதனால் கடன் தொகை குறையும். இதன் மூலம் இதுவும் திட்டமிட்ட ஆண்டுகளை விட, கடனை முன் கூட்டியே முடிக்க வழிவகுக்கலாம். 20 வருட கடனில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 5% செலுத்தினால் 12 வருடங்களுக்குள்ளே செலுத்தி முடிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com