துருக்கி பூகம்ப இடிபாடுகளில் சிக்கிய குதிரை, 21 நாட்களுக்குப் பிறகு உயிரோடு மீட்பு! நெகிழ வைத்த வீடியோ!

துருக்கி பூகம்ப இடிபாடுகளில் சிக்கிய குதிரை, 21 நாட்களுக்குப் பிறகு உயிரோடு மீட்பு! நெகிழ வைத்த வீடியோ!

கடந்த 6-ம் தேதி, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் சுக்குநூறாக நொறுங்கிவிழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதோடு, லட்சக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

தொடர்ந்து மீட்புக்குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் துருக்கியின் அடியமான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், 21 நாட்களாக இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் மாட்டிக் கொண்ட குதிரை உயிருடன் இருப்பதைக் கண்டறிந்து மீட்புக் குழுவினர் பத்திரமாக அதை மீட்டனர்.

ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோ காட்சியில், மீட்புக் குழுவினர் ஒன்றிணைந்து செயல்பட்டு பல மணி நேரத்திற்குப் பின் குதிரையை பத்திரமாக இடிபாடுகளில் இருந்து விடுவித்து பாதுகாப்பாக மேலே அழைத்துச் செல்கின்றனர்.

ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com