#BREAKING : மே 5 முதல் தங்கும் விடுதி கட்டணம் உயர்வு..!

Students staying in the hostel
Students staying in the hostel
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சிலிண்டர் விலை உயர்வால் தங்கும் விடுதிகளில் வரும் 5ம் தேதி முதல் கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 2026ல் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் சுமார் 990 ரூபாய் உயர்ந்து ரூபாய் 3,237ஐத் தொட்டுள்ளது. 3 மாதங்களில் 81% விலை உயர்வு காரணமாக உணவகங்கள், தங்கும் விடுதிகள் கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ளன. இதனால் உணவுகள், தங்கும் விடுதி கட்டணங்கள் கணிசமாக உயர்ந்து, சாமானிய மக்கள் மீது கடுமையான பண வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீர் விலை உயர்வால் கடைகளை மூட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் வணிக சிலிண்டர் மற்றும் அதன் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தின் காரணமாக தற்பொழுது விடுதிகளில் கட்டணம் உயர்த்த போவதாக தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2025 பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து எரிவாயு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலிண்டர் 6000,7000 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.இந்த இக்கட்டான சூழ்நிலையில் மர அடுப்புகளை பயன்படுத்தி எங்களால் முடித்த அளவுக்கு உங்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறோம். மரக்கட்டைகளின் விலையும் விண்ணளவு உயர்ந்துள்ளது. மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

எனவே 4 பேர் தங்கும் ஏசி அல்லாத அறைகளில் ₹6,500, ஏசி அறைகளுக்கு ரூ.7,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும். 3 பேர் தங்கக்கூடிய அறைகளில் ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை வசூலிக்கப்படும் என்றும், 2 பேர் தங்கும் வகையிலான ஏசி அல்லாத அறைகளில் ₹8,000, ஏசி அறைகளுக்கு ₹9,000 வரை வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1) 4 sharing Non Ac Rs6500-Ac7000

2) 3 Sharing Nan Ac7000-Ac8000

3) 2 Sharing Non Ac8000-Ac9000

குறைந்தபட்ச தொகையாக நிர்ணயத்திருக்கிறோம். ஒரு சில விடுதிகளில் அவர்கள் கொடுக்கும் வசதிகளை பொறுத்து இந்த விலை மாறுபடும். அனைவரும் எங்களுக்கு ஆதரவளித்து உங்களுக்கு சேவை செய்ய வழி செய்யுமாறு வேண்டுகிறோம்.

இதையும் படியுங்கள்:
போர் சூழலை சாதகமாக்கி வணிக சிலிண்டர் விலையை உயர்த்துவது சரியல்ல – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!
Students staying in the hostel
logo
Kalki Online
kalkionline.com