வாட்ஸ்அப்பில் ‘கோஸ்ட் பேரிங்’ மோசடி: ஹேக்கர்கள் பிடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

சமீபகாலமாக ஹேக்கர்கள் வாட்ஸ்அப் மூலம் சத்தமில்லாமல் பல மோசடி சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
WhatsApp
WhatsApp
Published on

இதுவரை மக்கள் தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகளை பயன்படுத்தி இருந்தாலும், அவை அனைத்திற்கும் முன்னுதாரணமாக விளங்கி மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது வாட்ஸ்அப் செயலிதான். தொடக்கத்தில் வெறும் மெசேஜ்கள் அனுப்பும் நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, தற்போது நம்முடைய பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடித்துவிடும் அளவுக்கு மேம்பட்டுள்ளது.

இதன் மூலம் புகைப்படங்கள், டாக்குமென்ட்கள், வீடியோக்கள் என நாம் பயன்படுத்தும் அனைத்தையும் பிறருக்கு எளிதாக இதில் பகிர முடியும். வாய்ஸ் நோட், வாய்ஸ் கால், வீடியோ கால் என சகல அம்சங்களையும் வாட்ஸ்அப் செயலி தன்னிடம் கொண்டுள்ளது. இதை எந்த அளவுக்கு நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறோமோ, அதே அளவுக்கு தீய செயல்களுக்கும் சிலர் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் சமீபகாலமாக ஹேக்கர்கள் வாட்ஸ்அப் மூலம் சத்தமில்லாமல் பல மோசடி சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

அதுபோன்ற மோசடி சம்பவங்களில் நீங்கள் மாட்டாமல் இருக்க இந்த 4 விஷயத்தை கண்டிப்பாக செய்து கொள்வது நல்லது. அது என்னவென்று பார்க்கலாம் வாங்க..

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப் அதிர்ச்சி: 350 கோடி பயனர்கள் தரவு கசியும் அபாயம்!மெட்டா அலட்சியம்..!
WhatsApp

இந்தியாவின் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி குழுவான CERT, வாட்ஸ் அப் உபயோகப்படுத்தும் அனைவரும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எதனால் என்றால், சைபர் குற்றவாளிகள் ஒரு புது முறையை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் ஏமாற்று வேலையை பார்த்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்தோ, அல்லது உங்களுடைய நண்பர்களிடம் இருந்தோ அல்லது உங்களுடைய அப்பா, அம்மாவிடம் இருந்தோ ஒரு மெசேஜ் வரும்.

அதாவது இந்த போட்டோவை பாருங்க. இது நீங்க தானானு பார்த்து சொல்லுங்க என்பது போன்ற வாசகத்துடன் வரும். ஏன்னா இதற்கு முன்பே அவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களின் அக்கவுண்டையும் ஹேக் செய்திருப்பார்கள். அதில் இருந்து தான் மெசேஜ் அனுப்புவாங்க. உங்களுக்கு அனுப்பப்பட்ட லிங்க் ஒரு பேஸ்புக் லிங்க் மாதிரியே கிரியேட் செய்திருப்பார்கள். நீங்க அது என்னவென்று பார்ப்பதற்கு அந்த லிங்க்கை கிளிக் செய்தால் அதில் ஒரு வெப்பேஜ் தெரியும். அந்த வெப்பேஜ் பார்ப்பதற்கு பேஸ்புக் மாதிரியே இருக்கும். ஆனால் அது உண்மையான பேஸ்புக் கிடையாது.

ஆனால் நீங்கள் அது உண்மையான பேஸ்புக் என்று நினைத்து அதில் இருக்கும் போட்டோவை பார்க்க முயற்சி செய்தால் உங்களுடைய போன் நம்பரை பதிவிடச்சொல்லி கேக்கலாம். அல்லது ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்ய சொல்லி கேட்கும். நீங்கள் அதை செய்யும் பட்சத்தில் உங்களுடைய வாஸ்ட்அப் அக்கவுண்ட் அந்த ஹேக்கரோட டிவைஸ்ல லிங்க்காகி விடும். இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை அவங்க சைலண்டடாக யூஸ் பண்ண முடியும். இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் உங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது.

நார்மலாக இருப்பது போலவே இருக்கும். App crashes அல்லது glitches ஆவது எல்லாம் உங்களுக்கு தெரியாது. நீங்க உங்களுடைய வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிக்க முடியாது. நீங்க உங்களுடைய அக்கவுண்ட்டில் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஹேக்கர்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

அதை வைத்து உங்களை பிளாக்மெயில் செய்யவோ, அல்லது வேறு ஏதாவது ஏமாற்று வேலை செய்யவோ அவர்களால் முடியும். இதை கோஸ்ட் பேரிங் என்று சொல்வார்கள். இதை வாட்ஸ் அப்பில் உள்ள link a device உள்ள Features பயன்படுத்தி தான் செய்கிறார்கள். இதில் நீங்கள் மாட்டாமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கு இந்த 4 விஷயங்களை செய்யவேண்டும்.

* உங்களுக்கு கிளிக் செய்து பாருங்கள் என்று ஏதாவது லிங்க் வந்தால், அது தெரிந்தவர்களிடம் இருந்து வந்திருந்தாலும் கூட அதை அவசரப்பட்டு கிளிக் செய்து விடாதீர்கள். நன்றாக சரிபார்த்த பிறகு லிங்க்கை பார்ப்பது நல்லது.

* உங்களுக்கு தெரியாத, சரிபார்க்கப்படாத வெப்சைட்டுகளில் உங்களுடைய போன் நம்பர் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

* வாட்ஸ்அப்பில் இருக்கும் link a device Features வைத்து தான் இந்த மோடிகளை செய்கிறார்கள் என்பதால் நீங்கள் அடிக்கடி உங்களுடைய வாட்ஸ்அப்பில் link a device செக் செய்து கொண்டிருப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப் மெசேஜிங்கில் உங்களை 'மதிப்புமிக்கவர்' ஆக்கும் 6 உத்திகள்!
WhatsApp

* ஒருவேலை உங்களுடைய வாட்ஸ்அப் link a deviceல் உங்களுக்கே தெரியாமல் ஏதாவது device இணைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அதை ரிமூவ் செய்து விடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com