
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி விட்டாலே அதனை தொடர்ந்து வரும் மூன்று மாதங்களும் பண்டிகை நாட்கள் தான். நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரும். பண்டிகை நாட்கள் வந்தால் வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும், வேலைக்கான இடம்பெயர்ந்தவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் வேலைக்காக இடம்பெயர்ந்தவர்கள் பண்டிகை கால விடுமுறையில் தான் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியும் என்பதால் அந்த நாட்களுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருப்பார்கள். அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களில் அடுத்து வரும் நாட்களில் அரசு எத்தனை நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடையே இருக்கும்.
அந்த வகையில் அடுத்த மாதம் வரும் தீபாளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தொடங்கிவிட்டது.
இந்தாண்டு, தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 20-ம்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக, தமிழகத்தில் தீபாவளிக்கு அன்றைய தினம் மட்டுமே அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படும். ஆனால் இந்தமுறை தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் அதனுடன் சேர்த்து இயல்பாகவே மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது.
சில சமயங்களில் அரசு தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப வருவதற்காகவும், ஒரு சிலர் தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நோன்பு அனுசரிப்பார்கள் என்பதாலும் தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை தினமாக அறிவிப்பது வழக்கம். அதாவது கடந்த காலங்களில், இதுபோன்ற பண்டிகை காலங்களில், மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு அடுத்த நாளை விடுமுறையாக அறிவித்து, அதற்கு பதிலாக வேறு ஒரு சனிக்கிழமையை வேலை நாளாக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மூன்று நாட்கள் விடுமுறையுடன், மேலும் ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக அமையும் போது, சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடி விட்டு ஊர் திரும்ப மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
அந்த வகையில் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தால் அக்டோபர் 18ம்தேதி(சனிக்கிழமை) முதல் அக்டோபர் 21-ம்தேதி (செவ்வாய்க்கிழமை (அரசு விடுமுறை அறிவித்தால்)) வரை நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
எனவே, இந்தாண்டும் அதே போன்ற ஒரு அறிவிப்பு வெளியாகும் என பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது. இருப்பினும் தமிழக அரசின் சார்பில் இதுவரை விடுமுறை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.
எனவே இந்தாண்டும் கடந்த ஆண்டுகளை போலவே தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை நாளாக அரசு அறிவிக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர். இருப்பினும் தமிழக அரசின் சார்பில் இதுவரை அக்டோபர் 21-ம்தேதி விடுமுறை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.