காற்று அடிக்கும் காலங்களில் மின் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது: மின்வாரியம் விளக்கம்!

காற்று அடிக்கும் காலங்களில் மின் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது: மின்வாரியம் விளக்கம்!

டி மாதங்களில் காற்றின் அளவு அதிகமாக காணப்படும். அப்பொழுது மின்சாரம் சம்பந்தமான பிரச்சினைகள் அதிக அளவில் சந்திக்க நேரிடும். தற்போது காற்றடிக்கும் காலங்களில் மின்சரா பிரச்சனையை எப்படி அணுக வேண்டும் என்று மின்சார துறை  அறிவுறுத்தி உள்ளது.

திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் மின் பகிர்மானம் கோ.குப்புராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களாக இருப்பதாலும், தற்போது காற்றின் அளவு அதிகரித்து வருவதாலும் அதிக அளவிலான மின்சார பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் மின் நுகர்வோர், பொதுமக்கள் கம்பிகள், மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டேட் கம்பிகள், டிரான்ஸ்பரங்கள் அருகில் செல்ல வேண்டாம். போஸ்ட் மரங்கள், ட்ரான்ஸ்பரங்கள் அருகில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்து இருந்தால் அதன் அருகில் செல்லவோ எடுக்கவோ கூடாது. மின் வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அதன் அருகில் மற்றவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தக்கூடிய தன்மை கொண்டவை. எனவே மரங்கள் விழுந்து இருந்தால் அதை அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. பச்சை மரங்களை வெட்டுவது கூடாது. ஏனென்றால் மின்கம்பிகளில் மரங்கள் பட்டு மின்சாரம் தாக்கக்கூடிய அபாயம் உள்ளது. மரங்களை வெட்டுவதாக இருந்தால் மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். 

மேலும் போஸ்ட் மரங்களில் விலங்குகளை கட்டுவது கூடாது. போஸ்ட் மரங்கள், ட்ரான்ஸ்பாரம் அருகே விலங்குகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். மின் சம்பந்தமான எந்த பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனடியாக  மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்காக 94 98 7 94 98 7 என்ற தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருப்பிடங்களில் மின்கசிவு ஏற்படாத வகையில் அனைத்து மின் இணைப்புகளிலும் மின் கசிவு தடுப்பு கருவியைப் பொருத்த வேண்டும். மின் வேலிகள் அமைப்பது சட்டவிரோதம். மின்வேலிகள் அமைத்து யாருக்கேனும், எந்த உயிரினங்களுக்கேனும்  பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com