
தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவினை தை மாதம் ஒன்றாம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
இப்பண்டிகையை தமிழ்நாட்டில் வசிக்கும் எல்லோரும் எந்தவிதமான பண நெருக்கடியும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்னும் நோக்கில் தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆண்டுதோறும் முன்கூட்டியே பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift) ஒன்றை இலவசமாக வழங்கி வருகிறது.
பச்சரிசி, கரும்பு, வெல்லம் ஆகிய பொருட்கள் இந்த இலவச பரிசுத் தொகுப்பில் இருக்கும். கூடவே, 1000 ரூபாய் ரொக்கப் பணமும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கொடுக்கும். இதனால் ஏழை, எளிய மக்களால் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாட முடிகிறது.ஆனால், ரேஷன் கார்டு (Ration card) இல்லாதவர்ள் இந்த பொங்கல் தொகுப்பினைப் பெறமுடிவயாது. ஆனால்,மாநில அரசு கூட்டுறவுத்துறை மூலம் மூன்று விதமான கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யத் தீர்மானித்துள்ளது.
மூன்று விதமான காம்போக்களில் விற்பனை செய்யப்படும் இந்த பரிசுத்தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், மஞ்சள் தூள், முந்திரி, ஏலக்காய், கடலை எண்ணெய், சீரகம், மிளகு, திராட்சை, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும். அவர்கள் தேர்வு செய்யும் தொகுப்புக்கு ஏற்ப தொகுப்பில் உள்ள பொருட்களும், அவற்றின் விலையும் மாறும்.
இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு விற்பனை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள். பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் நடக்கும்.
மார்க்கெட் விலையை விட இந்த பொங்கல் பரிசு தொகுப்பு விலை குறைவாகவே இருக்கும். எனவே, ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மலிவு விலையில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கி பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.