வேலைக்குச் செல்லாமல் பணக்காரர் ஆன Morimoto! இது நல்லா இருக்கே!

Do nothing man
Do nothing man
Published on

வாழ்க்கையில் சும்மாவே இருந்துக் கொண்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எப்போதாவது ஆசைப்பட்டிருக்கிறீர்களா? இதை கேட்க ஏதோ கதைப்போல இருந்தாலும், நிஜத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஜப்பானில் Soji Morimoto என்ற 40 வயது இளைஞர் இருக்கிறார். இவர் பெரிதாக எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்ததால், இவர் பணியாற்றிய கம்பெனியில் இவரை வேலையில் இருந்து நீக்கி வெளியே அனுப்பிவிடுகிறார்கள். இவருக்கு ஆறு வயது குழந்தை வேறு உள்ளதால், அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்திருக்கிறார்.

இவர் Introverted ஆக இருக்கிறார். எந்த வேலையையும் செய்வதில்லை என்று இவர் மீது வைத்த குற்றச்சாட்டுகளையே இவர் தனக்கு ஏற்ற வேலையாக மாற்றிக் கொண்டார். வீட்டை வாடகைக்கு விடுவது, காரை வாடகைக்கு விடுவதுப்போல இவர் இவரையே வாடகைக்கு விட்டுள்ளார்.

உங்களுக்கு ஏதாவது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும். ஆனால், தனியாக செல்ல விருப்பம் இல்லை என்றால் இவரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இவர் ஒரு மணி நேரத்திற்கு 85 டாலர் வாடகை பெறுகிறார்.

இவரை நீங்கள் வாடகைக்கு எடுத்தால் நீங்கள் கூப்பிடும் இடத்திற்கு இவர் வருவார். ஆனால், எதுவும் செய்ய மாட்டார். நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டால் ஆம், இல்லை என்று மட்டும் பதில் சொல்வாரே தவிர பேசக்கூடமாட்டார். இவருடைய இந்த வேலைக்கு பெயரே Do Nothing Man என்று வைத்துள்ளார். கடினமான உடல் உழைப்பு, சுத்தம் செய்யும் வேலைகள், ஆடையின்றி போஸ் கொடுப்பது, பாலியல் ரீதியான கோரிக்கைகள் போன்றவற்றை கண்டிப்பாக நிராகரித்து விடுவார்.

இதுவரை 5000 மேற்பட்ட மக்கள் இவரை வாடகைக்கு எடுத்துள்ளார்கள். சிலர் தனியாக சாப்பிட கஷ்டமாக இருக்கிறது என்று இவரை வாடகைக்கு எடுத்துள்ளனர். இன்னும் சிலர் தனியாக படம் பார்க்க வேண்டுமே என்று இவரை வாடகைக்கு எடுத்துள்ளனர். சில சமயங்களில் இவரை வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் போது கூட அழைத்து சென்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தங்கமா? ரியல் எஸ்டேட்டா? - முதலீட்டிற்கு எது சிறந்தது?
Do nothing man

அவருக்கான பயணச் செலவுகள் மற்றும் உணவகச் செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளரையே சேரும். எங்கே போனாலும் சரி ஒரு மணி நேரத்திற்கு ஏழாயிரம் ரூபாய் வாடகை வாங்குகிறார். இந்த வேலையை கேட்கவே நன்றாக இருக்கிறதல்லவா? சில மனிதர்கள் தனக்கு வரும் சோதனைகளை கூட சாதனைகளாக மாற்றி விடுகிறார்கள் என்பது வியப்பையளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com