அயோத்தி ராமர் ஆலய கும்பாபிஷேகம்: கலிபோர்னியாவில் கார் பேரணி நடத்தும் பக்தர்கள்!

அயோத்தி ராமர் ஆலய கும்பாபிஷேகம்: கலிபோர்னியாவில் கார் பேரணி நடத்தும் பக்தர்கள்!
resize.indiatvnews.com
Published on

யோத்தியில் ராமர் கோவில் கும்பாரிஷேகத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் மாபெரும் கார்கள் பேரணி நடத்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலில் வருகிற 22 ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை கொண்டாடும் வகையில் வருகிற 20 ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிறப்பு கொண்டாட்ட நிகழ்வாக மிகப்பெரிய்ய கார்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தெற்கு வளைகுடா பகுதியிலிருந்து கோல்டன் கேட் பாலம் வரை இந்த கார் பேரணி நடைபெறும் என்றும் இதில் 400 கார்கள் அணிவகுத்துச் செல்லும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய வரலாற்றில் அயோத்தியில் ஸ்ரீராமருக்கு ஆலயம் ஆலயம் கட்டப்பட்டு அங்கு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பக்தர்களுக்கு பெருமைதரும் இந்த நிகழ்வை கொண்டாட வடக்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம்.

அயோத்தியில் ராமர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெறும் நன்னாளில் அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தவிர அமெரிக்க வாழ் இந்தியர்கள் விழாவாக கொண்டாடவும் தீர்மானித்துள்ளனர்.

வாஷிங்டன், சிசாகோ உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில வாரங்களாக கார்கள் பேரணி நடத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் கார்கள் பேரணி நடத்த ரோகித் சர்மா, மணி கீரன், பரம் தேசாய், தைபாயன் தேவ், தீபக் பஜாஜ் மற்றும் விமல் பகவத் உள்ளிட்ட சமூகத் தலைவர்கள் திட்டமிட்டு வருகின்றனர் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் அயோத்தி சென்று ராமர் ஆலய கும்பாபிஷேக விழாவில் நேரிடையாக கலந்து கொள்ள முடியாவிட்டாலும், ஸ்ரீராமர் எங்கள் அனைவரின் இதயத்திலும் இருக்கிறார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com