‘மனித உரிமை மீறல் இந்தியாவில் அதிகம்’ அமெரிக்கா அறிக்கை!

‘மனித உரிமை மீறல் இந்தியாவில் அதிகம்’ அமெரிக்கா அறிக்கை!
Published on

மெரிக்க நாட்டின் வெளி விவகாரத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சார்பில், உலக நாடுகளின் மனித உரிமை மீறல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வருடத்துக்கான அந்த அறிக்கையில், ‘ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா, மியான்மர் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய அளவில் நடைபெறுகின்றன. இந்தியாவைப் பொறுத்த மட்டில் 2022ம் ஆண்டில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், பத்திரிக்கை ஊடக சுதந்திரம், மதம் மற்றும் சிறுபான்மையினரை குறி வைத்து வன்முறை உள்ளிட்ட பல மனித உரிமை மீறல் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவாகி உள்ளன.

இவை தவிர, அரசியல் தடுப்புக் காவல், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக் காவல்கள், ஊடகத்தின் மீதான பெரிய கட்டுப்பாடுகள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று உள்ளன’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில் இதுபோன்று ஏற்கெனவே மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கைகள் வெளியானபோது, அதை இந்திய அரசு மறுத்து வந்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com