ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள். 

ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள். 

ஸ்திரேலியாவில் உள்ள செயின்ஸ் கடற்கரையில் அதிக அளவிலான திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியுள்ளது. இவற்றை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் வனவிலங்கு அதிகாரிகளும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "தொடக்கத்தில் 20 திமிங்கலங்கள் வரைதான் இங்கே கரை ஒதுங்கி இருந்தது. நேரம் போகப்போக அதன் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 70 திமிங்கலங்கள் வரை கரை ஒதுங்கியுள்ளது. இவற்றை மீண்டும் கடலில் விடுவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். எங்களுடன் பொதுமக்களும் பல தன்னார்வலர்களும் இணைந்து அவற்றை கடலில் சேர்க்க போராடி வருகிறோம்" எனக் கூறியுள்ளனர். 

இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "நாங்கள் கடற்கரையில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென தூரத்தில் கருப்பு நிறத்தில் கூட்டமாக ஏதோ கரை ஒதுங்குவதை எங்களால் காண முடிந்தது. அப்போது கடலில் இருந்தவர்களை எங்களால் முடிந்த அளவுக்கு வெளியேற்றினோம். கொஞ்ச நேரம் கழித்து அவை மீன்கள் என்பதை எங்களால் உணர முடிந்தது. தொடக்கத்தில் இவை அனைத்தும் டால்பின் என நினைத்த நிலையில், வனவிலங்கு அதிகாரிகள் இவற்றை திமிங்கலம் என்று கூறினர். பின்னர் அதிகாரிகளுடன் இணைந்து அவற்றை கடலில் தள்ளி விட முயன்றும் முடியவில்லை" எனக் கூறியுள்ளனர்

கடந்த 2018 ஆம் ஆண்டில் கூட இதே போல, ஆஸ்திரேலியாவின் ஹாமெலின் விரிகுடாவில் 130க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழந்தது. இதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டில் 320 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. பொதுவாகவே திமிங்கலங்கள் 20 முதல் 30வரை கூட்டமாக வாழும். அல்லது சில சமயங்களில் 100 திமிங்கலங்கள் கூட கூட்டமாக வாழும். இப்படி இருக்கையில் இவையெல்லாம் தொடர்பு கொள்வதற்கு ஒலியை மட்டுமே பயன் படுத்துகிறது. இவை எழுப்பும் ஒலிகள் மிகவும் மென்மையாக மற்ற திமிங்கலங்களுக்கு கடத்தப்படுகிறது. 

ஆனால், கடலில் இருக்கும் போர்க்கப்பல்கள் வெடிகுண்டு வீசி பயிற்சி செய்வதனாலும், சில சரக்கு கப்பல்கள் கடலில் கவிழ்வதால் ஏற்படும் மாசுபாடு காரணத்தினாலும், திமிங்கலங்கள் எழுப்பும் ஒலியை உணரக்கூடிய சென்சார்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் அவை பயணிக்கும் பாதையில் தடுமாற்றம் ஏற்பட்டு, வழிமாறி கடற்கரையில் ஒதுங்கி இறந்து விடுகின்றன. இப்படிதான் திமிங்கலங்கள் கரை ஒதுங்கும் நிகழ்வு ஏற்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com