மலேசியாவில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தொங்கு பார்லிமென்ட் உருவாகி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த 19-ம் தேதி பார்லிமெண்ட் தேர்தல் நடந்தது. அங்குள்ள மொத்தம் 222 தொகுதிகளில் 2 தொகுதிகளின் வேட்பாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, 220 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. அந்நாட்டில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 111 இடங்கள் தேவை. .
இந்நிலையில் மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான சீர்திருத்த கூட்டணி, 82 இடங்களை பிடித்துள்ளது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான மலாய் தேசிய கூட்டணி, 73 இடங்களில் வென்று உள்ளது.
ஆளும் தேசிய கூட்டணி, 30 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் எந்தவொரு கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அங்கு தொங்கு பார்லிமென்ட் உருவாகியுள்ளது.
அங்கு புதிதாக ஆட்சி அமைக்க முயற்சிக்கும் கூட்டணியினர், தங்கள் ஆதரவு எம்.பி.,க்கள் பட்டியலை, மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவிடம் நேற்று மாலைக்குள் அளிக்கும்படி அரண்மனை அலுவலகம் உத்தரவிட்டது.
மலேஷியாவில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் தேசிய முன்னணி கூட்டணியினர் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க கால அவகாசம் கோரி உள்ளனர். இதையடுத்து, அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
மலேசிய முன்னாள் பிரதமர் மஹாதீர் முகமது (97) இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தவர். கடந்த 53 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காதவர். தற்போது நடந்த தேர்தலில், தன் சொந்த தொகுதியான லங்காவியில் போட்டியிட்டு, டிபாசிட் இழந்து படுதோல்வியைச் சந்தித்தார் குறிப்பிடத்தக்கது.