அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயன் என்ற கடுமையான சூறாவளி புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த வாரம் இயன் என்ற என்ற சூறாவளி கரையை கடந்தது. அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது. இதனால், புளோரிடா மாகாணமே கடுமையான பேரழிவை சந்தித்துள்ளது.
புயலால் வீடுகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. அதுவும் லீ கவுண்டி என்ற இடத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கரோலினா பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், புயல் காரணமாக நேரடியாகவும் மற்றும் மறைமுக காரணங்களாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐ தாண்டும் என அமெரிக்க மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் புயலால் பாதித்த பகுதிகளை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை அறிவித்துள்ளது.