போதையில் கூகுளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஹைதராபாத் ஆசாமி!

Arrest
Arrest
Published on

மும்பையில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக போதையில் மிரட்டல் விடுத்த ஆசாமியை உள்ளே தள்ளியது மும்பை போலீஸ். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள கூகுள் அலுவலகத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.54 மணியளவில் ஒரு மர்ம தொலைப்பேசி அழைப்பு வந்தது. முந்த்வா பகுதியில் உள்ள பல மாடி வர்த்தக கட்டிடத்தின் 11வது மாடியில் அமைந்துள்ள கூகுள் நிறுவன அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தொலைப்பேசியில் பேசியவர் கூறியுள்ளார்.

இதை கேட்டு பதறிப் போன கூகுள் நிறுவன அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறை அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் படி பொதுமக்களுக்கு அச்சம் அல்லது எச்சரிக்கையை விடுதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அது போலி மிரட்டல் என்பதைக் கண்டறிந்து, மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்துள்ளனர்.

புனே காவல்துறை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விரிவான சோதனைகளை மேற்கொண்டனர். பலமணி நேரச் சோதனைக்குப் பின் அபாயகரமான எந்த பொருளும் அங்கு இல்லை என அதிகரிகள் உறுதி செய்தனர். அத்துடன் தொலைப்பேசி என்னை வைத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு மது போதை ஆசாமியை கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர் குடிபோதையில் கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபரால் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் பதறிப்போயினர்.இசச்சம்பவம் கூகுள் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com