நாட்டில் ஹைட்ரஜன் ரயில் சேவை விரைவில் துவங்கும்: மத்திய அமைச்சர்!

நாட்டில் ஹைட்ரஜன் ரயில் சேவை விரைவில் துவங்கும்: மத்திய அமைச்சர்!
Published on

நாட்டில் 2023ம் ஆண்டிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களின் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ஒடிஸா மாநிலத்தின், புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது;

நம் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை 2023-ம் ஆண்டிலிருந்து தொடங்கும். அதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல பொருளாதார மண்டலங்களை இணைக்கும் வகையிலான ரயில் போக்குவரத்து கட்டமைப்புக் கொள்கை துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், நாட்டின் தொலைதூர பகுதிகள் மற்றும் பின் தங்கிய பகுதிகள் ஆகியவற்றை இணைப்பதற்கு இந்திய ரயில்வே உறுதி பூண்டுள்ளது. இந்திய தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அதிவேக ரயில்களில் ஒன்றாக வந்தே பாரத் ரயிலானது கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித தடங்கலும் இன்றி செயல்பட்டு வருகிறது. சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில், கூடுதலான வந்தே

பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவை வெகு விரைவில் சேவையை தொடங்க உள்ளன.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com