எனக்கு 17 உனக்கு 7.....! பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் ...!

எனக்கு 17 உனக்கு 7.....! பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் ...!

பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்ற போது அவரது கணவர் நிக் ஜோன்ஸ் 7 வயது தான் அப்போது தனது தந்தையுடன் விழாவை ரசித்து உள்ளார்.

பிரியங்கா சோப்ரா தற்போது 'லவ் அகைன்' படத்தில் நடித்து உள்ளார். இப்படம் மே 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் அவரது கணவர் நிக் ஜோனாஸும் கெஸ்ட் ரோலில் தோன்றினார்.

மும்பை 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.பிரியங்கா சோப்ரா நடிக்கும் புதிய வெப் சீரிஸ் 'சிட்டாடல்' அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய அத்தியாயங்கள் வெளியாகி வருகிறது.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் நிக் ஜோனாஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார். உலக அழகி பட்டம் வென்றபோது கணவர் நிக் ஜோனாஸ் என்ன செய்து கொண்டிருந்தார்? என்பதை அவர் வெளிப்படுத்தி உள்ளார். பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்றபோது அவருக்கு 17 வயது தான்.

பிரியங்காவுக்கு அப்போது 17 வயது என்றால், நிக் ஜோனாஸின் வயது எவ்வளவு தெரியுமா? அப்போது நிக் ஜோனாஸுக்கு 7 வயதுதான். இதை பிரியங்காவே தெரிவித்துள்ளார். தனது ஏழு வயதில் உலக அழகி போட்டியில் பிரியங்கா வெற்றி பெற்றதை அவரது கணவர் நிக் ஜோனாஸ் தனது தந்தையுடன் பார்த்து உள்ளார்.

இதனை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். "என் மாமியார் இதை என்னிடம் கூறினார். நான் 17 வயதில் உலக அழகி பட்டத்தை வென்றேன். அந்த போட்டி லண்டனில் நடந்தது. அப்போது எங்கள் மாமியார் நிக் தனது தந்தையுடன் அந்த விழாவை பார்த்ததாக என்னிடம் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com