ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன் - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!

ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன் - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!

தங்கர் பச்சானின் "கருமேகங்கள் கலைகின்றன". திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது. வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் தங்கர் பச்சானின் "கருமேகங்கள் கலைகின்றன". கருமேகங்கள் கலைகின்றன படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை மேடையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து பாடினார். எம்.எஸ்.வி. சாருக்கு இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன் என்றார் ஜி.வி.பிரகாஷ் . ஜி.வி.பிரகாசுக்கு அவர் உருவப்படம் பொறித்த புகைப்படம் ஒன்றை பரிசாக அளித்தார் இயக்குனர் தங்கர் பச்சான்.

பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசியபோது " ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு படமும் கற்பது தான். அதேபோல், ஒவ்வொரு இசையும் தியானம் தான். இசையைப் பொறுத்தவரை அந்தந்த தருணத்தில் உருவாவது தான்" என்றார்.

மேலும் அவர் பேசியபோது "கலைநயமிக்க கருமேகங்கள் கலைகின்றன படத்தில் இசையமைக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது . ஆகையால் தான் சம்பளத்தைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. இயக்குநர்கள் அந்த நம்பிக்கையை கொடுக்கும்போது நிறைய படைப்பு உருவாகும். அதுபோல், தங்கர் பச்சான் சாரும் என்மீது நம்பிக்கை வைத்தார். தங்கர் பச்சான் சார், பாலா சார் போன்றோர்கள் உணர்வுபூர்வமாகத்தான் இசை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் எதிர்ப்பார்த்த டியூன் கிடைத்து விட்டால் திருப்தியாக இருக்கும். எனக்கு எப்போதுமே மக்களின் உணர்வுகளை மையப்படுத்தப்படும் படம் தான் மிகவும் பிடிக்கும். இப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

இசையமைப்பாளராக என்னை உணர்வுகளோடு அழைத்து செல்ல வேண்டும். மேலும், ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து தான் இசையமைத்து வருகிறேன்.

எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் போன்ற அனைவரின் இசையைக் கேட்டு அதிலிருந்து தான் என்னுடைய இசையை அமைத்து வருகிறேன்.. என்றார். தங்கர் பச்சான் 'இசை இளவரசன்' என்று என்னை குறிப்பிட்டிருக்கிறார், அவருக்கு நன்றி " என்றார் ஜி.வி.பிரகாஷ் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com