சமந்தா
சமந்தா

மயோசிடிஸ் நோயோடு தினமும் போராடி வருகிறேன்! சமந்தா உருக்கம்!

திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். சமீப காலமாகவே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார் சமந்தா. தற்போது சமந்தா மயோசிடிஸ் என்கிற அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பலரும் சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததிருந்தனர். இதில் பல்வேறு திரை பிரபலங்களும் அடக்கம் அவர்களும் சமந்தா விரைவில் குணமடைய ஆறுதல் தெரிவித்திருந்தனர்.

இதில் நாகசைதன்யாவின் தம்பியும், நாகர்ஜூனா மற்றும் அமலாவின் மகனுமான அகில் அக்கினேனியும் சமந்தா விரைவில் குணமடைய டிவிட் செய்திருந்தார். தற்போது நாகசைதன்யாவும் சமந்தாவும் திருமண உறவில் இருந்து விலகி வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. எனினும் அவர்கள் சமந்தா பூரணமாக குணமடைய ஆறுதல் தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சமந்தா மற்றும் அவரது அரியவகை மயோசிடிஸ் நோய் குறித்த தகவல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது.

சமந்தா
சமந்தா

தற்போது சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக நேர்காணல் ஒன்றை சமந்தா அளித்துள்ளார். அதில் பேசிய நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோய் எனும் தசைத் தளர்வு நோயை எதிர்த்து ஒவ்வொரு நாளும் போராடி வருகிறேன். இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில தினங்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது

என் உடல்நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளது என செய்திகள் பரவி வருகிறது. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல் தான் இருக்கிறேன். அந்த தலைப்புச் செய்திகள் அவசியமானவை என நான் நினைக்கவில்லை. மிகவும் கஷ்டமான நிலையில் தான் இருக்கிறேன், ஆனாலும் எதிர்த்துப் போராடுவேன். பல விஷயங்களை கடந்து இவ்வளவு தூரம் வந்தவள் நான் என்று உருக்கமாக கூறினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com