மீண்டும் நானே வருவேன்... - டொனால்ட் ட்ரம்ப்

மீண்டும் நானே வருவேன்...  
-  டொனால்ட் ட்ரம்ப்
Published on

அமெரிக்க இடைத்தேர்தல்

“அமெரிக்காவில் அதிபர் தேர்தல்தான் நடந்து முடிந்து விட்டதே... பிறகு இது என்ன மற்றொரு தேர்தல்?” என சிலருக்கு சந்தேகம் இருக்கும். அமெரிக்காவை பொறுத்தவரை, அதிபர் பதவிக்கும், நாடாளுமன்றத்துக்கும் தனித்தனியே தேர்தல் நடைபெறும். அதிபர் தேர்தலுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது என்றால், நாடாளுமன்றத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதைத்தான் அமெரிக்க இடைக்காலத் தேர்தல் எனக் கூறுகிறோம். அதிபர் தேர்தல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த இடைக்காலத் தேர்தல். தற்போது இந்தத் தேர்தல்தான் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆளும் ஜனநாயகக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கும் நேரடிப் போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே மேலவையில் குடியரசுக் கட்சிக்கு அதிக இடம் உள்ள நிலையில், பிரதிநிதிகள் சபையையும் கைப்பற்ற தீவிர முயற்சியில் குடியரசுக் கட்சி ஈடுபட்டு வருகிறது.

இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அதிபர் ஜோ பைடன் தலைமையில் களம் இறங்க., குடியரசுக் கட்சி வேட்பாளர்களோ முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் களம் காண்கின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்த தேர்தலில் பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றினால், 2026 அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் நிச்சயம் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.

இதுவரை வெளிவந்த இந்த அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வெற்றிப்பெற்றுள்ளனர். 4வது முறையாக எம்.பி.யானார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான பிரமிளா ஜெயபால். இதுவரை 4 இந்திய வம்சாளிகள் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளனர்.

இந்நிலையில், இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளிகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பாலும், ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்றுள்ளனர். 435 உறுப்பினர்களைக் கொண்ட அவைக்காக நடந்த இடைத்தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரான சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால், வாஷிங்டன் மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் கிளிப் மூனை வென்றுள்ளார். பிரதிநிதிகள் அவையில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் இந்திய வம்சவாளி இவர் மட்டுமே.

இதேபோல், மிச்சிகன் மாகாணத்தில் இருந்து முதல் முறையாக வென்ற இந்திய வம்சாவளி என்ற சாதனையை தனேதர் படைத்துள்ளார். இல்லினோனிஸ் மாகாணத்தில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து 4வது முறையாக வென்றிருக்கிறார்.

சிலிக்கான் வேலி மாகாணத்தில் ரோ கண்ணா, குடியரசு வேட்பாளரை வென்றுள்ளார். கண்ணா, கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா மூன்று பேரும் 4வது முறையாக எம்.பி.யாகி உள்ளனர். இதுதவிர, கலிபோர்னியாவில் அமி பேரா 6வது முறையாக வெற்றி பெறும் நிலையில் முன்னிலையில் உள்ளார். மேரிலாண்டில், ஜனநாயக கட்சி வேட்பாளர் அருணா மில்லர் வெற்றி பெற்று “துணை நிலை ஆளுநராகும் முதல் இந்திய வம்சாவளி” என்ற வரலாற்றை படைத்துள்ளார். அங்கு தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com