"தேசியக்கொடியில் ஆட்டோகிராஃப் போட மாட்டேன்". தங்கமகன் நீரஜ் சோப்ரா.

"I will not autograph the national flag". Neeraj Chopra.
"I will not autograph the national flag". Neeraj Chopra.

உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதன்முறையாக தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் நீரஜ் சோப்ரா. அத்துடன் தங்கம் வென்ற பிறகு அவர் செய்த ஒரு காரியமும் அவரை அனைவரும் பாராட்ட வைத்துள்ளது. 

இந்த ஆண்டு ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதற்கு முன்பு நடந்த உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 2 பதக்கங்கள் மட்டுமே வெற்றிள்ளது. இதுவரை ஒரு முறை கூட தங்கம் வென்றதில்லை. ஆனால் இந்த ஆண்டு நடந்த போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இவர் ஏற்கனவே கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் பவுல் செய்தார். பின்னர் தனது இரண்டாவது முயற்சியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இவருக்கு பின் வந்த வீரர்கள் பலமுறை ஈடி வீசிய போதிலும் யாராலும் இவருடைய தூரத்தை தாண்ட முடியவில்லை. இதன் மூலமாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதன்முறையாக இந்தியாவுக்காக தங்கத்தைப் பெற்றுத்தந்து வரலாறு படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. 

இவர் தங்கம் வென்றதால் பலரும் பாராட்டி வந்த நிலையில், போட்டிக்கு பிறகு அவர் செய்த ஒரு காரியமும் அனைவரது மனதையும் கவரும் வகையில் அமைந்தது. போட்டி முடிந்த பிறகு பலரும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரஜ் சோப்ராவிடம் ஆட்டோகிராப் வாங்க நெருங்கினார். அந்த நபர் நீரஜ் சோப்ராவிடம் இந்தியக் கொடியில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டார். அதை அமைதியாக மறுத்து "இது எங்கள் தேசியக் கொடியின் விதிமுறைகளுக்கு எதிரானது. என்னால் இதில் கையெழுத்து போட முடியாது" எனக் கூறி மறுத்துவிட்டார். 

அதன் பிறகு அந்த நபரின் டீ சர்ட்டில் நீரஜ் சோப்ரா ஆட்டோகிராப் மோட்டார். இவரின் இந்த செயலை பலரும் கொண்டாடி வருகின்றனர். விளையாட்டு மட்டுமின்றி தன் தாய் நாட்டு தேசியக் கொடியை மதிப்பதிலும் நீரஜ் சோப்ரா சிறந்தவர் என பலரும் பாராட்டி வருகின்றனர். அத்துடன் மூவர்ணக் கொடி அருகில் இருக்க தன் பெண் ரசிகையின் டீசர்டில் அவர் ஆட்டோகிராப் போடும் புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com