அப்பாவுக்காக நான் தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டேன்; டொனால்ட் டிரம்ப் மகள்!

டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்
Published on

 அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-ல் நடக்கவுள்ள நிலையில், அமெரிக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அவர் மகள் இவான்கா டிரம்ப் இந்த முறை தேர்தலில் தன் அப்பாவுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக டிரம்ப் நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்தார். மேலும், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாகவும், புகழ்பெற்றதாகவும் மாற்றுவதற்கு அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கிறேன். வரும் 2024-ம் ஆண்டு, மீண்டும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடத் தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

 இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நான் என் தந்தையை மிகவும் நேசிக்கிறேன். என் தந்தை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

அரசியலில் ஈடுபடும் எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை. இந்த நேரத்தில் நான் என்னுடைய குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்திருக்கிறேன். நான் எப்போதும் என் தந்தையை நேசிப்பேன், ஆதரிப்பேன்.

இனி வரும் நாள்களிலும் அரசியல் அரங்குக்கு வெளியிலிருந்து அதைச் செய்வேன். அவருடைய தேர்தல் பிரசாரத்தில் நான் பங்குபெறப் போவதில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், டிரம்ப் அதிபர் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அறிவிப்பு வெளியிட்டபோதும்கூட இவான்கா அதில் கலந்து கொள்ளவுமில்லை. இதற்கு முன்னதாக இவான்கா டிரம்ப், அவருடைய கணவர் ஜாரேட் குஷ்னர் இருவரும்,டிரம்ப் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் மூத்த ஆலோசகர்களாக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com