முட்டாள் கிடைத்தால் விலகுவேன்! எலான் மஸ்க் அதிரடி!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்
Published on

முட்டாள்தனமான நபர்கள் கிடைத்தால் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து தினமும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை எனலாம் . அதன்படி தினமும் உலகின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடங்கி தினம் ஒரு பிரச்சினை, பல்வேறு குழப்பம் எனத் தொடர்ந்து வருகிறது. எலான் மஸ்க் ட்விட்டரில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வந்ததை தொடர்ந்து பல உயர் அதிகாரிகள் பதவி விலகினர்.

ட்விட்டரில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ட்விட்டரில் மஸ்க் கருத்துக்கணிப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.

elan musk
elan musk

இதுகுறித்து அவரின் ட்விட்டரின் பக்கத்தில், "ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? கருத்துக்கணிப்பு முடிவுகளை பின்பற்றுவேன்" என அவர் பதிவிட்டிருந்தார். அதில், தற்போது வரை, பதவி விலக வேண்டும் என 57.2 சதிவிகித்தனர் வாக்களித்துள்ளனர். பதவி விலகக் கூடாது என 42 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளனர்.

ட்விட்டர் பயனர்களின் வாக்குப்பதிவை அடுத்து, எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக ஒரு அறிவிப்பை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ”ட்விட்டர் பொறுப்புகளை ஏற்க கூடிய முட்டாள்தனமான நபர் கிடைத்தால் சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகுவேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ”புதிய சி.இ.ஓ. வந்ததும் சாப்ட்வேர், சர்வர்ஸ் டீம்களை நான் கவனிப்பேன் எனவும் தெரிவித்தார். ட்விட்டரின் தலைமை பொறுப்பிலிருந்து விலக பயனர்கள் 57 சதவீத ஆதரவு தெரிவித்த நிலையில் எலான் மஸ்க்  அறிவித்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com