சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகி விடுவேன் - ஆளுநர் RN ரவி !

சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகி விடுவேன் - ஆளுநர் RN ரவி !
Published on

ஆளுநர் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது விலகிவிடுவேன் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டம் சென்றுள்ளார். அங்கே மண்டபத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை கழிப்பதை தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மனதை ஒருங்கிணைத்து எதிர்கால சிந்தனையை செயல்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும். மாணவ, மாணவிகள் குறிப்பாக 9வகுப்பு மேல் கவனமுடனும், திறன்பட உழைக்க வேண்டும். ஒவ்வொரு நேரத்தையையும் பயனுர பயன்படுத்த வேண்டும்.

NMMS
NMMS

மேலும் நம் நாட்டில் விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம். மாணவர்கள் மனதை ஒருமுகபடுத்த யோகாசனம் செய்யுங்கள் என தெரிவித்த அவர், ‘நான் வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன்’ என கூறினார்.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சிபிஐ, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மதிமுக. விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். நாளை இமானுவேல் சேகரனார் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் ஆளுநர் அஞ்சலி செலுத்துகிறார்.

மனதை ஒருங்கிணைத்து பாடுபட்டால் நீங்கள் நினைத்தபடி கலெக்டராகவோ, மருத்துவராகவோ, பொறியாளரகவோ, வழக்கறிஞராகவோ, தொழில் அதிபராகவோ திறம்பட ஆகலாம் என மாணவ, மாணவிகளிடம் தெரிவித்தார். மாணவர்கள் மனதை ஒருமுகபடுத்த யோகாசனம் செய்யுங்கள் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com