“ விதிமுறைக்குட்பட்டு துக்ளக் சாலையில் உள்ள வீட்டை காலி செய்கிறேன்” - ராகுல் காந்தி !

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

துக்ளக் சாலையில் உள்ள வீட்டை காலி செய்வதாக மக்களவை செயலருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வசித்து வரும் பங்களாவை காலி செய்யுமாறு மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியது.

ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களில் டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யுமாறும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியதுடன் பெரும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. நேற்று இந்த நோட்டீஸ் ராகுல் காந்திக்கு பாராளுமன்ற வீட்டு வசதிக் குழு அளித்த நிலையில், மறுநாளே ராகுல் காந்தி பதிலும் அளித்துள்ளார் என்பதும் பாரபரப்பாகிவிட்டது.

மக்களவை உறுப்பினர் என்ற முறையில், ராகுல் காந்திக்கு டெல்லி துக்ளக் லேன் சாலையில் 12-ஆம் எண் முகவரி கொண்ட அரசு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. ராகுல் காந்தி வீட்டில்தான் வசித்து வந்தார். தற்போது தகுதி நீக்கத்தால் எம்.பி. பதவியை ராகுல் காந்தி இழந்து விட்டதால், அந்த வீட்டை அவர் காலி செய்ய வேண்டும் எனக்கோரி மக்களவையின் வீட்டு வசதிக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

வரும் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக, மக்களவை உறுப்பினர் பதவியை ஒருவர் இழந்த நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை என்று சொல்லப்படுகிறது. ராகுல் காந்திக்கு ஒருவேளை கால அவகாசம் தேவைப்பட்டால், வீட்டு வசதிக்குழுவுக்கு கடிதம் எழுதலாம் என்றும், அதை அக்குழு பரிசீலிக்கும் என்றும் அதிகரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அரசு ஒதுக்கிய பங்களாவை காலி செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மக்களவை செயலருக்கு ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ விதிமுறைக்குட்பட்டு துக்ளக் சாலையில் உள்ள வீட்டை காலி செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி வீட்டைக் காலி செய்யுமாறு விடுக்கப்பட்ட நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளார். அதில், கடந்த 4 முறையாக மக்களவை உறுப்பினராக இருந்த எனக்கு அங்கு (வீட்டில்) கிடைத்த மகிழ்ச்சியான நினைவுகளுக்கு கடன்பட்டுள்ளேன். எனது உரிமைகள் குறித்து பழி எதுவும் கூறாமல் கடிதத்தில் உள்ள விவரங்களை பின்பற்றி நிச்சயமாக நடப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com