ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் பணியிட மாற்றம்!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

தமிழ் நாட்டில் முக்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் முதன்மை செயலாளர் உதய சந்திரன் நிதித் துறை செயலாளராக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப் பட்ட பொழுதே மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப் படுவார்கள் என எதிர்பார்க்கப் பட்டது. மேலும் சில முக்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச் சந்திரன், நிதித் துறைச் செயலாளராகவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத் துறைச் செயலாளராகவும், நிதித் துறைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராகவும் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

போக்குவரத்துத் துறைச் செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையராகவும் நியமிக்கப் பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப் பட்டுள்ளார். காதாரத் துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளராகவும், சுற்றுலாத் துறைச் செயலாளர் சந்திரமோகன் பொதுப் பணித்துறைச் செயலாளராகவும், உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத் துறைச் செயலாளராகவும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் அமுதா, உள்துறைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழக அரசின் வரலாற்றில் 3வது முறையாக பெண் ஐஏஎஸ் அதிகாரி உள்துறைக்கு செயலாளராக நியமிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

பொதுப் பணித்துறைச் செயலாளராக டாக்டர் பி.சந்திரமோகன் நியமிக்கப் பட்டுள்ளார். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளராக டி.ஜெகன்நாதன் நியமிக்கப் பட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com