தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை தற்போது இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலாளராக அபூர்வாவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் செயலாளராக அதுல்ய மிஸ்ராவையும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்துறை ஆணையராக ஹிதேஷ் குமார் மக்வானாவும், உயர்கல்வித் துறையின் கூடுதல் செயலாளராக பழனிசாமியும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையராக நந்த கோபாலையும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநராக சரவணவேல் ராஜையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சிறப்பு செயலாளராக லில்லியையும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பேரூராட்சிகள் இயக்குநராக கிரண் குர்ராலாவையும், சமூக சீர்திருத்தத்துறைச் செயலாளராக ஆப்ரஹாமையும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
சமூக நலத்துறை செயலாளராக ஷுன்சோன்கம் ஜகத்தும், செய்தித்துறை செயலாளராக செல்வராஜையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய் நிர்வாக இணை ஆணையராக இருந்த ஜான் லூயிஸ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இப்படியாக மொத்தம் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.