இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண வந்த யூடியூபர் IShowSpeed... யார் இவர்?

IShowSpeed
IShowSpeed

மெரிக்க யூடியூபரான ஐஷோ ஸ்பீட் (IShowSpeed) அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் விளையாட்டை காண வந்துள்ளார். ஐஷோ ஸ்பீடின் வருகை இந்திய யூடியூபர்கள் மற்றும் சமூக வலைத்தளத்தில் அவரை பின்தொடர்பவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐஷோ ஸ்பீட் கடந்த 2017 ம் ஆண்டு தனது யூடியூப் சேனலை தொடங்கினார். இதில் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கேமிங் வீடியோத்தான் பதிவிறக்கிக் கொண்டுவந்தார். ஆனால் ஐஷோ ஸ்பீட் அதுவும் தொடர்ச்சியாக வீடியோ போடவில்லை.பிறகு வீடியோ போடுவதையே சுத்தமாக நிறுத்தினார்.

அதன்பின் 2020ம் ஆண்டு கொரோனா சமயத்தில் அனைவரும் வீட்டிலையே இருந்ததால் ஆளாளுக்கு யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோக்களை அப்லோட் செய்துகொண்டு வந்தனர். அப்போதுதான் மீண்டும் தன் யூடியூப் பயணத்தை தொடங்கினார் ஐஷோ ஸ்பீட் . ஒருசமயத்தி திடீரென்று ஒரு யோசனை வந்து கேமிங் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஸ்பீட் விளையாடிவந்தார். விளையாட்டில் தோற்றுவிட்டால் மிக ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு அருகில் இருந்த பொருட்களையெல்லாம் போட்டு உடைத்தார்.அது மிகவும் ட்ராமாடிக்காக இருந்ததனால் மக்கள் விரும்பி பார்க்க அவரின் யூடியூப் சேனலை பார்க்க ஆர்ம்பித்தனர்.

இதன்மூலம் 5 சப்ஸ்கிரைபிலிருந்து 5 ஆயிரம் சப்ஸ்கிரைப்பர்கள் வரை உயர்ந்தது. ஸ்பீட் ஒரு ஸ்ட்ரீமில் தனக்கு வெறும் 12 வயதுதான் என்று கூறியவுடன் யூட்யூப் அவரின் சேனலை முடக்கியது. அதற்கும் ஐஷோ ஸ்பீட் மற்ற சமூக வளைத்தளங்களில் கதறி அழுதுக்கொண்டே லைவில் வந்தார். அதுதான் அவர் யூட்யூபில் நட்சத்திர நாயகனாக உலா வர மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது.

ஸ்பீடின் வீடியோ கிளிப்களை எடுத்து டிக் டாக்கில் போட்டனர், மீம்ஸ், ட்ரோல் போன்றவை செய்ய ஆரம்பித்தனர். பிறகு யூட்யூபே ” அப்பா சாமி அழாதப்பா, உன் சேனலை Enable பன்றோம்” என்று கூறி ஒரே நாளில் யூடியூபிற்குள் மீண்டும் வந்தார். எதாவது பேட் கமண்ட் வந்தால் போதும் அவர் வீட்டில் எது உடையும் என்றே தெரியாது. இது மக்களுக்கு பெரிய பொழுதுபோக்காக அமைந்தது.

அதிக சப்ஸ்கிரைபர்களும் வரத் தொடங்கினர். அதை மேலும் கூட்டுவதற்கு ஸ்பீட் நேரடியாக ஒரு இடத்திற்கு சென்று ப்ரான்க் செய்வதும் அதை கிண்டல் செய்து ரியாக்ட் செய்வதுமாக வீடியோ பதிவிறக்கினார் . எந்த அளவிற்கு என்றால் போலீஸ்காரர்களைக் கூட விட்டு வைக்காமல் முட்டாள் போல் கேள்வி கேட்டு திட்டு வாங்குவார். இது இன்னும் ரசிகர்களை ஈர்த்தது.

ஒரு வழியாக தன் வெற்றி ரகசியத்தை உணர்ந்துக் கொண்டார் ஐஷோ ஸ்பீட். முட்டாளாக நடிப்பது அனைவருக்கும் பிடிக்கும் என்று புத்தி சாலியாக யோசித்து முட்டாளாக மாற ஆரம்பித்தார். அப்போதிலுருந்து எதாவது மக்களிடையே முட்டாள் தனமாக பேசி வீடியோக்கள் அப்லோட் செய்தார்.

எவ்வளவு பார்வையாளர்கள் இருந்தாலும் ஸ்பீடுக்கு பத்தவேயில்லை. மறுபடியும் ஒரு யோசனை செய்தார். தான் ஒரு கால்பந்து விளையாட்டின் ரசிகர் என்றும் ரொனால்டோ பெஸ்ட், மெஸ்ஸி வேஸ்ட் என்று லைவில் புது கன்டன்ட் போட ஆரம்பித்தார். இதற்காகவே கால்பந்து ரசிகர்கள் கூட்டமும் அன்றிலிருந்து ஸ்பீட் லைவில் சேர ஆரம்பித்தனர். அவ்வளவுதான் ஒரு யூட்யூபராக உச்சம் தொட்டார். ரசிகர்கள் அலைமோதினர்.

இந்நிலையில்தான் ஸ்பீட் இன்று அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண வந்துள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் விராத் கோலியின் மிகப்பெரிய ரசிகர் ஆவார்.

அமெரிக்காவிலிருந்து இந்தியா பாகிஸ்தான் விறுவிறுப்பான போட்டியை காண ஸ்பீட் வந்திருப்பது அவரின் இந்திய ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com