இந்தியாவின் தோல்விக்கு ஆறுதல்கள் கூறிய பிரபலங்கள்!

India lost the 2023 icc cricket world cup
India lost the 2023 icc cricket world cup

சிசி உலக கோப்பை தொடரில் இந்த ஆண்டு இறுதிபோட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். ஆஸ்திரேலியா வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர்,போட்டியில் வெற்றி தோல்விகள் சகஜம், இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டம் மக்கள் நினைவில் என்றும் நிற்கும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இந்திய அணியை பாராட்டி “அறையிறுதி வரை யாராலும் தோற்கடிக்க முடியாதப்படி விளையாடியதற்கு பாராட்டுக்கள். உங்கள் ஆர்வம் பாராட்டுக்குறியது” என்று கூறினார்.

இயக்குனர் செல்வராகவன், “போட்டி முடிந்த பின்னர் அழுதுக்கொண்டே இருந்தேன். நான் அழுதது கிரிக்கெட்டில் தோற்றதற்கு அல்ல, என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை“என உருக்கமான பதிவிட்டிருந்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது x தளத்தில் வீரர்களின் திறமைகளைப் பாராட்டியிருந்தார். வெற்றியை விட வீரர்களின் திறமைகளே முக்கியமானது என்றும் பல முன்னாள் வீரர்களின் சாதனைகளை முறியடித்ததும் தான் சிறப்பான விஷயம் என்றும் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவிந்திரா விராட் கோலியை அணைத்து ஆறுதல் சொல்லும் அனுஷ்கா ஷர்மா புகைப்படத்தை பதிவிட்டு “ கடினமான காலத்தில் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இதுபோன்ற துணை கிடைக்க வேண்டும்” என்று அந்த அழகிய நிகழ்வை பதிவிட்டிருந்தார்.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இந்திய அணி சேம்பியன் ஆகவில்லை. ஆனால் உண்மையான சேம்பியன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்று அவர்களுக்கு தான் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்திய அணியின் விளையாட்டை நேரில் பார்த்து ரசித்த ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார். விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி, எழுவது வீழ்வது எல்லாம் சகஜம். இந்திய வீரர்களுக்கு ஒரு பெரிய கைத்தட்டலை கொடுப்போம் என்று பாராட்டியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com