சாதி பாகுபாடு பார்த்தால் கடும் நடவடிக்கைகள்!

Anbil Mahesh
Anbil Mahesh

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய சம்பவமானது தமிழகத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இத்தகைய சம்பவங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதே போல் சாதி பாகுபாடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

ஆனாலும் இத்தகைய சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை குறித்த செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு இது குறித்த புகார்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

இதை குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் " இது கவலை தரும் சேதி தக்க நடவடிக்கைகள் தேவை" என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com