தான்சானியா நாட்டில் சென்னை ஐஐடி கிளை!

தான்சானியா நாட்டில் சென்னை ஐஐடி கிளை!

உலகில் முதன்முறையாக தான்சானியா நாட்டில் சென்னை ஐஐடி கிளை தொடங்கப்படவிருக்கிறது எனும் செய்தியை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உருதிப் படுத்தியுள்ளார்.

தேசிய கல்வியியல் தரவரிசை கட்டமைப்பியல் நடத்திய ஆய்வில் இந்தியாவின் தலைசிறந்த கல்விநிறுவனமாக தொடர்ந்து 8 ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நேற்று அதற்கான விருதைப் பெற்றுள்ள நிலையில் ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களுடன் நடத்திய உரையாடலின் போது, மேற்கண்ட கல்வியியல் தரவரிசைப் பட்டியலில் முதல் 25 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களே பெற்றுள்ளமை கண்டு தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில் மாணவர்களிடையே உலக அளவில் அறிவைப் பகிர்வதற்காக உலகில் முதன்முறையாக தான்சானியா நாட்டில் சென்னை ஐஐடி கிளை தொடங்கவிருப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மருத்துவ அறிவியல் படிப்பில் எதிர்காலத்தில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாகத் தெரிவித்த அவர். தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக களமிறங்கவிருக்கும் சென்னை ஐஐடி குறித்து துறை ரீதியாக முறையான அறிவிப்பை தாங்கள் விரைவில் வெளியிடவிருப்பதாகவும் கூறினார்.

இந்த அறிவிப்பை ஒட்டி பி எஸ் இன் மெடிக்கல் சயின்ஸஸ் & இஞ்ஜினியரிங் பயில முதல் பேட்சுக்கான 30 மாணவர்கள் சேர்க்கைக்கு இதுவரையிலும் ஆயிரக்கணக்கான அப்ளிகேஷன்கள் வந்து குவிந்திருக்கின்றன என்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவ அறிவியல் (மெடிக்கல் சயின்ஸ்) படிப்பு தான் கணினி அறிவியல்(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புக்கான சிறந்த மாற்றாக வளரவிருக்கிறது. அது தொடர்பான வேலை வாய்ப்புகள் உலகம் முழுவதும் அதிகரிக்கவிருக்கின்றன. அதை முன்கூட்டியே தெளிவாக உணர்ந்து தான் நாங்கள் இப்படி ஒரு படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையை 50% அதிகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாகவே சென்னை ஐஐடி இத்தகைய புதிய முன்னெடுப்புகளை நிகழ்த்துகிறது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐஐடியில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதற்காக 2 கமிட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com