இமானின் இசைப் பயணம்!

இமானின் இசைப் பயணம்!

இருபது ஆண்டுகள் என்ற அசாதாரணமான இமானின் இசைப் பயணத்தில் 100 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து 150 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார் டி.இமான். அவரது இசையின் வடிவம் ‘மாஸ்+கிளாஸ்’ என சமமாகப் பயணித்து.

பள்ளியில் படிக்கும்போதே கீபோர்டு பிளேயராக தனது இசைப் பணியைத் துவங்கி, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பியானோ வாசித்து. பிறகு இசையமைப்பாளர் ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி, சுமார் 250க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்துப் பயணித்திருக்கிறார் இமான்.

நல்ல குரல் எங்கு இருந்தாலும் தேடிச் சென்று அந்த கலைஞர்களுக்கான அங்கீகாரத்தையும் உருவாக்கி கொடுத்து இருக்கிறார். இதுவரை 150 க்கும் மேற்பட்ட புதிய குரல்களை எனது இசையில் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் 'கண்ணான கண்ணே' பாடலைப் பாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்து, அவரை ‘சீறு’, ‘அண்ணாத்தே’ படங்களில் பட வைத்தார்.

வைக்கம் விஜயலட்சுமியை, ‘என்னமோ ஏதோ’ படத்தில், ‘புதிய உலகை ஆளப் போகிறேன்’ என்ற பாடல் மூலம் தமிழில் முதலில் பட வைத்தார். வேடந்தாங்கல் கிராமத்தில், புத்தர் கலைக் குழுவில், பறை இசைத்து கிராமியப் பாடல்கள் பாடிக்கொண்டு இருந்த நாட்டுபுறப் பாடகரான மகிழினி தமிழ்மாறனை, ‘கும்கி’ படத்தின் ‘கையளவு நெஞ்சத்துல’ பாடல் முலம் திரைக்கு அறிமுகப்படுத்தினர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் மூலம் ஹரிஹரசுதனை அறிமுகபடுத்தினார்.

நாட்டுப்புறப் பாடகரான செந்தில் கணேஷை சீமாராஜா படத்தில் பயன்படுத்தி இருப்பார். இப்படித் திறமையானவர்களை அடையாளப்படுத்தும் இமானின் பட்டியலில் தற்போது புதிதாக சேர்த்து இருப்பவர் ஸ்வஸ்திகா சுவாமிநாதன். இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வளர்ந்து வரும் பாடகரான ஸ்வஸ்திகா சுவாமிநாதனின் ஆத்மார்த்தமான குரலில், யுக பாரதி வரிகளில் உருவாகி உள்ள ‘அணையா விளக்கு’ பாடலை விரைவில் வெளியாக இருக்கும் ‘பப்ளிக்’ திரைப்படத்தில் கேட்க ஆவலுடன் இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com