ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம்!

ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குனராக  இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம்!
Published on

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன், சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளியல் வல்லுநகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் தற்போது செயல்பட்டு வருகிறார். அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் கேரளாவை சேர்ந்தவர்.

தற்போது, அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குனராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிகாலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Geetha Gopinath
Geetha Gopinath

தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா செயல்பட்டு வரும் நிலையில் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் ஆகிய இரு உயர் பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறை என்கிற சிறப்பினை பெறுகிறார் கீதா கோபிநாத்.

கீதா கோபிநாத் ஓர் இந்திய அமெரிக்க பொருளாதார அறிஞர் இவர் டிசம்பர் 1971 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இச்சான் சுவான்டிரா பன்னாட்டு பொருளாதார ஆய்வு பேராசியராக பணிபுரிகிறார். அக்டோபர் 2018 இல் அனைத்துலக நாணய நிதியத்தின் முதன்மை பொருளாதர அறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதன் துணை இயக்குநராகவும் உள்ளார். இவரின் ஆராய்ச்சி பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதை முதன்மைபடுத்தியே உள்ளது. இவர் கேரள முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com