முதியவர்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு - திருச்சி மாநகர காவல்துறை அறிவிப்பு!

முதியவர்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு - திருச்சி மாநகர காவல்துறை அறிவிப்பு!

திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்தியபிரியா பொறுப்பேற்ற பிறகு திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்கள் "பெட்டிஷன் மேளா" என்ற பெயரில் குறைதீர்க்கும் கூட்டங்களின் நடத்தி உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்படி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து சில மணி நேரங்களில் தீர்வு கண்ட நிகழ்வும் அரங்கேறி உள்ளது.

இந்த நிலையில் சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 14.7.2023 காலை 9 மணியளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி காலில் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்தக் குறைதீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்தவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை, குறைகளை மனுக்களாக எழுதி குறைதீர்க்கும் கூட்டத்தில் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு தீர்வு வழி வகைச் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

மேலும் முதலமைச்சர் முகவரிக்கு அனுப்பப்பட்டு ஆணையருக்கு மாற்றப்படும் மனுக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக வரும் மனுக்கள், நேரடியாக தினம் தோறும் காவல் ஆணையருக்கு வரும் மனுக்கள் என்று அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக விசாரணை துவங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் காவல் காவல் நிலையங்களில் பெறப்படும் புகாருக்கு உரிய மனு ரசீது வழங்கி, விரைவாக வழக்கு விசாரணையை தொடங்கி முடிப்பதற்கு முயலவேண்டும் என்றும் காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com