விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! பி.எம். கிசான் திட்டத்தின் அடுத்த தவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

PM kisan scheme
PM kisan scheme
Published on

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பி.எம். கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் அடுத்த தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசின் இந்த முக்கிய திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று சம தவணைகளாக (தலா ரூ. 2000) நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு நேரடியாகப் பணம் கிடைப்பதால், இது ஒரு பெரிய நன்மையாகப் பார்க்கப்படுகிறது.

பி.எம். கிசான் திட்டத்தின் தவணைகள் பொதுவாக குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுகின்றன. ஆண்டுக்கு மூன்று தவணைகள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளன:

முதல் தவணை: ஏப்ரல் முதல் ஜூலை வரை

இரண்டாம் தவணை: ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை

மூன்றாம் தவணை: டிசம்பர் முதல் மார்ச் வரை

கடந்த சில ஆண்டுகளாக, இந்த தவணைகள் பெரும்பாலும் ஆகஸ்ட், அக்டோபர், மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக, 2023ஆம் ஆண்டின் 15ஆவது தவணை நவம்பர் மாதத்திலும், 2022ஆம் ஆண்டின் 12ஆவது தவணை அக்டோபர் மாதத்திலும் வெளியிடப்பட்டன. ஆகையால், இந்த முறை அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிடலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் வாரனாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிஎம் கிசான் 20வது தவணையை வெளியிட்டார். இதன் மூலம், கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் சென்றடைகிறது.

ஆகையால் தற்போது, இந்தத் திட்டத்தின் அடுத்த தவணையின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 21வது தவணையை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது. தீபாவளி, சத், வரவிருக்கும் பீகார் தேர்தல்கள் மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற சமீபத்திய பேரழிவுகள் காரணமாக இந்த மாத இறுதிக்குள் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் இந்தத் தவணை வெளியிடப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், 21வது தவணைக்கான அதிகாரப்பூர்வ தேதியை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

இந்தத் தொகை, விவசாயிகளுக்கு தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும், விவசாயப் பணிகளுக்கும் ஒரு பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டதா என்பதை பி.எம். கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம். ஆதார் எண், மொபைல் எண் அல்லது வங்கி கணக்கு எண் போன்ற தகவல்களைப் பயன்படுத்தி, தங்கள் விண்ணப்ப நிலை மற்றும் தவணை விபரங்களை எளிதாக அறிந்துகொள்ள முடியும். தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் தங்களது இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை முடித்துக்கொள்வது அவசியம். இ-கேஒய்சி முடிக்காதவர்களுக்குப் பணம் வருவதில் தாமதம் ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
மனித தொண்டையில் மறைந்திருந்த புதிய உறுப்பு... மிரண்டு போன விஞ்ஞானிகள்!
PM kisan scheme

பி.எம். கிசான் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் உட்பட, பல மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்குப் பெரும் ஆதரவை அளித்துவருகிறது. அடுத்த தவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது, அது விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com