இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம்! பாகிஸ்தானில் வெடிக்கும் வன்முறைகள்!

இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம்! பாகிஸ்தானில் வெடிக்கும் வன்முறைகள்!
Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே ஒரு வித பதற்றமான சூழல் நிலவுகிறது. அவரது கைது தொடர்ந்து ஆதரவாளர்கள் பெருந்திரளாகப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கே நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைந்து வரும் நிலையில், இம்ரான் கான் கைதை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் சட்டப்பூர்வமானது என்றே தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பிடிஐ தலைவருமான இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து பாகிஸ்தான் ரேஞ்சர்களால் நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் அங்குப் பல இடங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது

நேற்று வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவரை பாகிஸ்தானின் துணை ராணுவ படையினர் கைது செய்தனர். இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவருக்கு ஆதரவாக இப்போது பாகிஸ்தான் முழுக்க பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

.சில இடங்களில் இந்த போராட்டம் தீவைப்பு மற்றும் கலவரத்தில் முடிந்துள்ளது.. இதுவரை கலவரத்தில் ஆறு பேர் இதில் உயிரிழந்துள்ளனர்.. குவெட்டா, பைசலாபாத், சக்தாரா ஸ்வாட், லாகூரில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையக நுழைவாயிலை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் நாடு முழுக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் சில பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் கூட நடந்தது. இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பல இடங்களில் தீ வைத்தும் எரித்தனர். இதனால் ஒரு வித பதற்றமான சூழலே நிலவியது.

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு, வளாகத்திற்கு ராணுவ சின்னங்களை அடித்து நொறுக்கினர். மேலும், போராட்டக்காரர்கள் லாகூர் கான்ட்டில் உள்ள கார்ப்ஸ் கமாண்டரின் வீட்டிற்குள் நுழைந்து அவரது வீட்டிற்கு வெளியே இருந்த பொருட்களை தீ வைத்து எரித்தனர். மேலும், போலீஸ் தடுப்புகளைத் தூக்கி எறிந்து தீ வைத்தனர்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, பிடிஐ கட்சியினர் கைபர் பக்துன்க்வா பகுதியிலும் போராட்டம் நடத்தினர். அங்கே கானின் ஆதரவாளர்கள் பெஷாவரில் உள்ள ரேடியோ பாகிஸ்தான் கட்டிடத்திற்கும் தீ வைத்தனர். கைபர் பக்துன்க்வாவில் உள்ள சிந்து நெடுஞ்சாலையை அவரது ஆதரவாளர்கள் டயர்களை எரித்தனர். மேலும், அங்குள்ள விமான படை தளத்திற்கும் வெளியேயும் போராட்டம் நடத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com