சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் வாக்குச்சாவடிகளை நிர்வகிக்கும் மகளிர்!

சத்தீஸ்கர் தேர்தல்
சத்தீஸ்கர் தேர்தல்

நாட்டிலேயே முதல் முறையாக சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் 201 வாக்குச்சாவடிகளை நிர்வகிக்கும் பொறுப்பு முழுவதும் மகளிரிடம் ஒப்புடைக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு சமீபத்தில் வாக்குப்பதிவு நடந்த்தது. இரண்டாவது கட்டமாக வெள்ளிக்கிழமை 50 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.

நாட்டின் ஜனநாயக வரலாற்றில் முதல் முறையாக ராய்ப்பூர் வடக்கு பேரவைத் தொகுதியில் 201 வாக்குச்சாவடிகளை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்களிடம் விடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்தல் அதிகாரி முதல் வாக்குச்சாவடி அதிகாரி வரை அனைவரும் பெண்கள்.

201 வாக்குச்சாவடிகளில் 804 பெண்களிடம் நேரடியாக பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பார்வையாளரும் ஒரு பெண்தான். ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவரது பெயல் விமலா. அவருக்கு உதவியாளரும் ஒரு பெண் அதிகாரிதான். வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியிலும் பெண்களே ஈடுபட்டுள்ளனதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் தேர்தல் நடைமுறைகளை தொடங்கிபோதே வாக்குச்சாவடிகளை முழுமையாக பெண்களே நிர்வகிக்கும் யோசனை குறித்து விவாதிக்கப்பட்டு திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் சர்வேஸ்வர் நரேந்திர புரே தெரிவித்தார்.

வாக்குச்சாவடிகளில் முழுவதும் பெண்களே நிர்வகிப்பது வரலாற்று நிகழ்வாகும். கொடுத்த பணியை சிறப்பாக முடிக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. ராய்ப்பூர் தெற்கு பேரவைத் தொகுதியிலும் சில வாக்குச்சாவடிகளில் பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் புர்ரே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com