சென்னையில் அரண்மனைகாரன் தெருவில் 4மாடி கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு !

சென்னையில் அரண்மனைகாரன் தெருவில் 4மாடி கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு !

சென்னையில் 4மாடி கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

சென்னை பாரிமுனையில் அரண்மனைகாரன் 4வது தெருவில் 4 மாடி கட்டடம் ஒன்று புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென] இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வண்டிகளில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டட இடிபாடுகள் 5 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்டோசர் நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி கட்டட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி இருக்கும் பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com