கலைஞர் கோட்டம் திறப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வருகை திடீர் ரத்து!

கலைஞர் கோட்டம் திறப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வருகை திடீர் ரத்து!

மிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூர் அருகே காட்டூரில் 12 கோடி ரூபாய் செலவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏழாயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த நினைவிடத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைப்பதாக இருந்தது. அதேபோல், முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கான முன்னேற்பாடுகள் மிகவும் வேகமாக நடைபெற்று வந்தன. அதன்படி, கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க வருகை தரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறப்பு விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையம் வருகை தந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் விமானம் மூலம் திருவாரூர் சென்று, அங்கிருந்து கார் மூலம் காட்டூர் சென்று கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் திருவாரூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதற்கான காரணமும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, நிதிஷ் குமாருக்கு திடீரென உடல் நலம் சரி இல்லாததால் அவரது தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அமைச்சர் சஞ்சய் ஜா ஆகியோர் இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். சற்று நேரத்துக்கு முன்பு கிடைத்த தகவலின்படி கலைஞர் கோட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com