அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் வருமான வரி சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

ஐ.டி ரெய்டு, முற்றுகையிட்ட தி.மு.க தொண்டர்கள், கார்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்திருக்கிறார். வருமான வரி சோதனைக்கு நான் எப்போதும் தயார். 1996க்கு பின்னர் ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கியதில்லை என்றும் தன்னுடைய வீடு என்று குறிப்பிடப்படும் இடம், தம்பியின் மாமியாருக்கு சொந்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை இன்று காலை முதல் நடத்தி வருகிறாக்ரள். குறிப்பாக டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல இடங்களில் வருமான வரி சோதனை அதிகாலையே ஆரம்பமாகிவிட்டது.

கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதிகாரிகள் சுவரேறி குதித்து வீட்டுக்குள் சென்றதால் அந்தப் பகுதியை சேர்ந்த தி.மு.க தொண்டர்கள் வீட்டை முற்றுகையிட்டு அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தி.மு.க தொண்டர்கள் இடையூறு ஏற்படுத்திய காரணத்தால் காவல்துறையினர் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே வருமான வரி சோதனையை எதிர்கொண்டதாகவும், வருமான வரியை முறையாக செலுத்தக்கூடியவர்களின் வீடுகளில்தான் தற்போது சோதனை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். என் வீட்டில், எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்பு தர தயராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கரூரில் புறநகர்ப் பகுதியில் பிரம்மாண்டமாக கட்டடப்பட்டு வரும் கட்டிடம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை மறுத்தவர், அது தன்னுடைய நிலமோ, கட்டிடமோ இல்லையென்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் சொந்தமானது அல்ல என்றும் விளக்கம் தந்திருக்கிறார். தன்னுடைய தம்பி மாமியாருக்கு சொந்தமான நிலத்தை அவர், வாரிசுகளுக்கு வழங்கியிருப்பதாகவும் அதில் தம்பியின் மனைவி கட்டிடம் கட்டுவதாகவும் கூடுதலாக விளக்கம் தந்திருக்கிறார்.

முன்னதாக வருமான வரி சோதனைகள் தொடர்பாக சென்னையில் திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். சி.பி.ஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டி வருவதாகவும், வருமான வரி சோதனைகள் மூலம் அச்சுறுத்திவிடலாம் என்று நினைப்பதாகவும் தெரிவித்தார். எத்தனையோ சோதனைகளை பார்த்த தி.மு.க, என்றைக்கும் அஞ்சியது இல்லை. தமிழக முதல்வர் வெளிநாடு பயணம் குறித்தும் அதன்

காரணமாக தமிழ்நாட்டிற்கு வரவிருக்கும் முதலீடுகள் பற்றிய செய்திகளை திசை திருப்பதற்காகவே வருமான வரி சோதனை நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து கரூர் மற்றும் சென்னையில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதோடு, மின்சாரத்துறை, டாஸ்மாக் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுவது ஏன் என்கிற கேள்விக்க பதிலளித்தவர், செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை திட்டமிட்டு செய்கிறார். மாநில காவல்துறைக்குக் கூட தகவல் சொல்லாமல் வருமான வரித்துறை சோதனை நடத்துவது சந்தேகமளிக்கிறது. திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ரெய்டு நடத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com