செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை - வருமான வரித்துறை விளக்கம்..!

selvaperunthagai
selvaperunthagai image source:Dailythanthi
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தன்னுடைய வீட்டில் சோதனை நடத்துவதாகக் கூறி தன்னை முடக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை மீது புகார் கூறியுள்ளார். அத்துடன் ராகுல் காந்தியின் பிரச்சாரத்துக்கு செல்ல விடாமல் தடுத்ததாகவும், வருமான வரித்துறை சோதனை காரணமாக தென் மாவட்டங்களில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாடகமாடிய செல்வப் பெருந்தகையின் கூற்றை  வருமான வரித்துறை மறுத்துள்ளது. செல்வப் பெருந்தகை கூறியது போல் அவருடைய வீடு மற்றும் உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை என்றும், ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்ல விடாமல் தடுத்ததாக கூறுவதும் உண்மையில்லை என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

செல்வப் பெருந்தகை வீட்டுப் பக்கமாக வருமான வரித்துறையினர் சென்று வேறொரு இடத்திற்கு சென்றதாக  தகவலை வெளியிட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com