வருமான வரியா? தயக்கமே இல்லாமல் வரி கட்டி, ரெக்கார்ட் பிரேக் செய்யும் இந்தியர்கள்

வருமான வரியா? தயக்கமே இல்லாமல் வரி கட்டி, ரெக்கார்ட் பிரேக் செய்யும் இந்தியர்கள்

 

சுதந்திர இந்திய வரலாற்றில் சென்ற ஆண்டுதான் வருமான வரித்துறை அதிகப்படியான வரியை வசூல் செய்திருப்பதாக பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டில் முன்கூட்டிய வரிச் செலுத்துவதில் 41 சதவீத அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக 2022 -23 நிதியாண்டில் ஜனவரி 10ஆம் தேதி வரை நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் 24.58 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வருமான வரி முலமாக ரூ.14.71 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கிறது. தனிநபர் வருமான வரி கட்டுவது அதிகரித்த காரணத்தால்தான் மத்திய அரசும் அதில் சீர்திருத்தங்களை செய்ய முன் வந்திருக்கிறது. 

ஆண்டுதோறும் வருமான வரியாக மத்திய அரசுக்கு வரும் தொகை, கடந்த சில ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்திருக்கிறது. வருமான வரி பழைய கணக்கீட்டுத் திட்டம், புதிய கணக்கீட்டுத் திட்டம் என இரண்டுமே பாப்புலராக இருப்பது நல்ல செய்திதான்.

வரும் நிதியாண்டில் மிடில் கிளாஸ் மக்கள் குறைவான வருமான வரி செலுத்தினால் போதும் என்கிற நிலை ஏற்பட்டிருப்பதால், இன்னும் பலர் வருமான வரி கட்ட முன்வருவார்கள். அதன் மூலம் சுமை குறையும் என்று மத்திய அரசும் எதிர்பார்க்கிறது.

வருமான வரியை வசூலிப்பதில் மத்திய அரசும் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. ஒவ்வொரு நூறு ரூபாய் வசூல் தொகைக்கும் ஏறக்குறைய 57 பைசா செலவிடப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. இது மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக்குறைவு.

100 ரூபாய் வருமான வரி வசூல் செய்வதற்கு லண்டனில் 73 பைசா செலவிடப்படுகிறது. ஜப்பானில் 174 பைசா செலவிடப்படுகிறது. ஜெர்மனியில் 135 பைசாவும், கனடாவில் 150 பைசாவும் பிரான்ஸில் 111 பைசாவும் செலவிடப்படுகின்றன. பிற நாடுகளோடு ஒப்பிடும்போது அதில் பாதியளவு கூட மத்திய அரசு செலவு செய்வதில்லை.

100 ரூபாய்க்கு 57 பைசா என்பது இன்னும் குறையக்கூடும். ஆனாலும், வருவான வரி கட்டுவதில் அமெரிக்கர்களை யாரும் மிஞ்ச முடியாது. அங்கே 100 ரூபாய்க்கு 40 பைசா கூட அரசுகள் செலவழிப்பதில்லை.  வருமான வரி கட்டாமல் தவிர்த்தால், தண்டத்தொகை அதிகம் என்பதால் அமெரிக்கர்கள் அலட்சியம் காட்டுவதில்லையாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com