ஆயிரம் கோடிக்கு கணக்கு காட்டாத சார் பதிவாளர் அலுவலகம்: ரைடில் சீக்கிய ஆவணங்கள்!

ஆயிரம் கோடிக்கு கணக்கு காட்டாத சார் பதிவாளர் அலுவலகம்: ரைடில் சீக்கிய ஆவணங்கள்!

தமிழ்நாடு முழுவதும் 270 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து அலுவலகங்களும் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை 30 லட்சத்திற்கும் மேல் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனையை வருமான வரித்துறையின் நுண்ணறிவு பிரிவு தெரியப்படுத்த வேண்டும். மேலும் இடங்களை வாங்கியது, விற்பனை செய்தது அது சம்பந்தமான பரிவர்த்தனை கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருச்சி உறையூர் மருதாண்டாகுறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகமும், சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவுக்கு கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் திடீரென்று உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான சோதனை நடத்தினர். இதில் ஐந்து வருடத்திற்கு முன்பான பண பரிவர்த்தனையையும், 5 வருடத்திற்கு பிறகான பண பரிவர்த்தனையும் ஒப்பிட்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணபரிவர்த்தனைக்கான கணக்கு காட்டாமல் மறைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திமுக திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்து தருவோம் என்ற வாக்குறுதியை முன் வைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த வருடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ள பிராட்டியூர் பகுதியில் திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் அடுத்த வருடத்திற்குள் திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பதற்காக விரைவாக பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிராட்டியூர் பகுதியை சுற்றிலும் இடம் வாங்குவதற்கு விற்பதற்கு பல பெரிய பெரிய நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருவதாகவும் அந்த நிறுவனங்கள் அந்த பகுதியில் வாங்கிய இடம் பற்றிய எந்தவித கணக்கும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இது சம்பந்தமான ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.இதேபோல் சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2000 கோடி ரூபாய் அளவிற்கு பரிவர்த்தனைக்கான கணக்கு காட்டப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com