இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு: ஒரே நாளில் 4,435 பேருக்குத் தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு: ஒரே நாளில்  4,435 பேருக்குத் தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,435 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவிட்-19 நெறிமுறையை பின்பற்ற வேண்டும். அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்து அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா பரவல் தொடர்பாக டில்லி உட்பட பல மாநிலங்களில் அவசரக் கூட்டங்கள் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்திற்கு சுகாதார துறை அதிகாரிகளை மாஸ்க் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று அதிகரித்தது. அதனை எதிர்கொள்ளும் வகையில் கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுப்பட்டு பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸில் தாக்கம் காணப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,435 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று காரணமாக 23,091 பேர் சிசிக்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,508 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் கவலைப்பட தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

தற்போது பரவி வரும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. இந்த தொற்று பாதிப்பால், மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. கொரோனாவின் அனைத்து வகைகளையும் கண்டு மக்கள் பீதி அடைய வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் 3,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி, இதுவரை அனைத்து வகைகளிலும் பயனுள்ளதாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com