அக்டோபர் 1 - ஆம் தேதி முதல் சென்னை கோட்டத்திலுள்ள எட்டு முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்வு. தற்போது ஆயுதபூஜை ,சரஸ்வதிபூஜை, தீபாவளி என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் ரயில்நிலைய பிளாட்பாரங்களில் மக்கள் கூட்டம் பெருமளவு அதிகம் வர வாய்ப்புள்ளது.
அதை தொடர்ந்து தற்போது ரயில்நிலையங்களில் நடைமேடை கட்டணம் அதிகரிக்கும் முடிவை ரயில்வேத்துறை மேற்கொண்டுள்ளது .
தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில்நிலையமான காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் ஆவடியிலும் நடைமேடை கட்டணம் உயர்ந்துள்ளது.
அக்டோபர் 1 - ஆம் தேதி முதல் ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது அக்டோபர் 1 - ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும்" என ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய ரயில்நிலையமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ரயில்நிலையம் (சென்ட்ரல்),எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில்நிலையத்தில் நடைமேடை கட்டணம் உயர்ந்துள்ளளது.
இந்த பிளாட்பார கட்டணம் உயர்வால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது.